'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வருண் தவான், நவாசுதீன் சித்திக் நடிப்பில் வெளியான படம் பட்லாப்பூர். தினேஷ் விஜன் தயாரித்தார். தற்போது இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்க எண்ணியுள்ளார் தினேஷ். அதிலும் இந்தப்படத்தில் தீபிகா படுகோனேயை நடிக்க வைக்க எண்ணியுள்ளார். ஏற்கனவே தினேஷின் காக்டாயில், லவ் ஆஜ் கல், பைண்டிங் பேனி போன்ற படங்களில் நடித்துள்ளார் தீபிகா.
இந்நிலையில், இதுதொடர்பாக தீபிகாவிடம், தினேஷ் பேசியதாகவும், படத்தின் ஒன்லைன் கதை அவருக்கு பிடித்து போய்விட்டதால் நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது கதை பணிகள் முழுவீச்சில் நடக்கிறது, அந்த பணி முடிந்ததும், தீபிகா நடிப்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.