மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
புதிய திரைப்படங்கள் வெளிவருவதற்கு முன்னர் அந்தப் படங்களின் பாடல்களை வெளியிடுவதுதான் திரையுலகத்தில் வழக்கமாக இருந்து வருகிறது. அந்த பாடல்கள் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாகவும் நடத்தி படத்தின் வியாபாரத்திற்கு துணை புரியும் அளவிற்கு சேர்த்துக் கொள்வார்கள். ஆனால், படம் வெளியான பின் அந்தப் படத்தின் பின்னணி இசையை மட்டும் வெளியிடுவது அபூர்வமாகத்தான் நடந்து வருகிறது.
தமிழ், தெலுங்கில் இரண்டு பாகங்களாக வெளிவந்த 'பாகுபலி' படத்தின் பின்னணி இசையை விரைவில் வெளியிட உள்ளார்களாம். இது பற்றிய அறிவிப்பை படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி என்கிற மரகதமணி வெளியிட்டுள்ளார். இரண்டு பாகங்களின் பின்னணி இசையை வெளியிடும் வேலைகள் ஆரம்பமாகிவிட்டதாம். ஆடியோ கம்பெனி மூலமும், ஐ டியூன்ஸ் மூலமும் அதை வெளியிட உள்ளார்கள்.
'பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் பின்னணி இசை பிரமாதமாக அமைந்து படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாகவும் அமைந்தது.