டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பல பக்தி படங்களில் நடித்திருக்கும் அனுஷ்கா, நிஜத்திலும் அதிக பக்தி கொண்டவராம். தனது குலதெய்வத்தின் கோயிலுக்கு மாதந்தோறும் சென்று வழிபாடு நடத்து வழக்கம் கொண்ட அவர், அவுட்டோர்களுக்கு செல்லும்போதும் அங்குள்ள பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். முக்கியமாக, சாமி சம்பந்தப்பட்ட காட்சிகளில் நடிக்கும்போது நான் வெஜ் அயிட்டங்களை அவர் தொடவே மாட்டாராம்.
மேலும், பாகுபலி-2வைத் தொடர்ந்து தற்போது பாக்மதி படத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில், அனுஷ்கா தனது குடும்பத்தாருடன் இணைந்து கர்நாடகாவில் உள்ள பாப்பநாடு ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி கோயில் மற்றும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்தியிருக்கிறார். இந்த பூஜை அனுஷ்காவின் திருமணம் விரைவில் நடைபெறுவதற்காக நடத்தப்பட்டதா? இல்லை வேறு ஏதேனும் நேர்த்திக்கடனுக்காக நடந்ததா? என்பது தெரியவில்லை.