Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மே 31ம் தேதி 'ஸ்பைடர்' டீசர் வெளியீடு ?

27 மே, 2017 - 12:34 IST
எழுத்தின் அளவு:
Spyder-movie-teaser-on-may-31

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்க 100 கோடி ரூபாய் செலவில் உருவாகி வரும் படம் 'ஸ்பைடர்'. இப்படத்தின் வசனக் காட்சிகள் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பின் இரண்டு பாடல் காட்சிகள் படமாக வேண்டியுள்ளது. முதலில் இப்படத்தின் வெளியீட்டை ஜுன் 23ம் தேதி வைத்திருந்தார்கள். ஆனால், படம் செப்டம்பர் மாதம்தான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


'ஸ்பைடர்' படத்தின் தலைப்பு அறிவிப்பு மற்றும் முதல் பார்வையை கடந்த மாதம் வெளியிட்டார்கள். அதற்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. அடுத்து படத்தின் டீசர் எப்போது வெளிவரும் என்று மகேஷ் பாபுவின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். தற்போது கிடைத்துள்ள தகவல்படி மே 31ம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.


மகேஷ் பாபுவின் அப்பா நடிகர் கிருஷ்ணாவின் பிறந்த தினமான அன்று மகேஷ் பாபு அவர் படம் சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு விஷயத்தை அறிவிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி, அன்று 'ஸ்பைடர்' டீசர் வெளியாகலாம் என்கிறார்கள். 58 வினாடிகள் ஓடக் கூடிய டீசரை முருகதாஸ் தயார் செய்துவிட்டார் என்றும், அதில் மிரட்டலான கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளது என்றும் சொல்கிறார்கள்.


'பாகுபலி 2' அல்லாத முந்தைய தெலுங்குப் படங்களின் சாதனையை 'ஸ்பைடர்' டீசர் முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in