ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
திருநெல்வேலி அருகே மலையாள பட சூட்டிங்கிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, படக்குழுவினர் ஓட்டம் பிடித்தனர். நெல்லை அருகே சுந்தரபாண்டியபுரத்தில், "நம்பர் 66" மதுரை என்ற மலையாள திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. நாயகன் பசுபதி, நாயகி பத்மப்ரியா நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டுக்கொண்டிருந்தன.
இந்த நிலையில் அங்கு வந்த தமிழ் ஆர்வலர்கள் பலரும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க நினைக்கும் கேரளா அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர். தமிழ்நாட்டில் மலையாளப் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு வலுவடைந்ததை அடுத்து உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் படக்குழுவினர் அனைவரும் கேரளாவுக்கே திரும்பிச் சென்றனர்.