மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நயன்தாரா, அதர்வா, ராக்ஷி கன்னா ஆகியோர் நடித்துள்ள படம் 'இமைக்கா நொடிகள்'. 'டிமான்டி காலனி' படத்தின் இயக்குனரான அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இப்படம் ஒரு சைக்கோ திரில்லர் கதை. இந்தப் படத்தில் பிரபல ஹிந்தி பட இயக்குனர் அனுராக் காஷ்யப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.
அவரது கதாபாத்திரம் பற்றிய தகவல் தற்போது கிடைத்திருக்கிறது. அதாவது, சைக்கோவாக சீரியல் கில்லராக நடித்திருக்கிறார் அனுராக் காஷ்யப். அவரை கண்டுபிடிக்கும் சிபிஐ அதிகாரியாக நயன்தாரா நடிக்கிறாராம். இமைக்கா நொடிகள் படத்தில் விஜய் சேதுபதி கெஸ்ட்ரோலில் நடிப்பதாக ஏற்கெனவே தகவல் வெளியானது.
உண்மையில் விஜய்சேதுபதி கெஸ்ட்ரோலில் நடிக்கவில்லையாம். கதையில் முக்கிய திருப்பத்தை உண்டாக்கும் கதாபாத்திரத்தில்தான் விஜய்சேதுபதி நடித்திருக்கிறார். 'நானும் ரௌடிதான்' படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதியும், நயன்தாராவும் இணைந்த படம் என்பதை வைத்து 'இமைக்கா நொடிகள்' படத்தை பிசனஸ் செய்துவிடலாம் என்ற எண்ணத்திலேயே இந்த காம்பினேஷனை நடிக்க வைத்துள்ளனர்.