பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த, இப்போதும் படங்களில் நடித்து வரும் அமிதாப் பச்சனுக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமே. ஆனால் எல்லா ரசிகர்களாலும் அமிதாப்பை சந்தித்துவிட முடிகிறதா என்ன..?, நம் சூப்பர்ஸ்டார் ரஜினி கூட கடந்த சில நாட்களாக தனது ரசிகர்களை சந்தித்தாலும், ஒரு குறிப்பிட அளவிலான ரசிகர்களுக்கே அந்த பாக்கியம் கிடைத்தது. ஆனால் அமிதாப் அப்படி ஏதும் சந்திப்பை நிகழ்த்தாத நிலையிலும், அமிதாப்பின் தீவிர ரசிகையான 103 வயது பெண்மணி ஒருவரின் நீண்டநாள் ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.
கிறிஸ்டின் என்கிற பெண்மணி கிட்டத்தட்ட அமிதாப் நடிக்க ஆரம்பித்து சூப்பர் ஸ்டார் ஆன காலத்தில் இருந்தே அவரது தீவிர ரசிகையாக இருந்தவர். இத்தனைக்கும் அமிதாப்பை விட 30 வயது மூத்தவரான இவர் அமிதாப் படங்களை ஒன்று விடாமல் பார்த்துவிடுவாராம். தனது இறுதிக்காலத்துக்குள் அமிதாப்பை எப்படியாவது ஒருமுறை சந்தித்து விட வேண்டும் என்பது அவரது நீண்ட நாள் ஆசை. இது எப்படியோ படிப்படியாக அமிதாப்பின் கவனத்துக்கும் வந்தது. உடனே அந்த பாட்டியை தனது வீட்டிற்கே வரவழைத்து அவரை சந்தித்து சந்தோஷத்தில் ஆழ்த்தி விட்டார் அமிதாப். அத்துடன் அந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட அந்த போட்டோ தற்போது செம வைரல் ஆகியுள்ளது.