பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சின்னத்திரையில் கோலோச்சிக்கொண்டு இருந்தாலும் கூட, தர்மதுரை, சங்கிலி புங்கிலி கதவ தொற என ஏதாவது நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் அவ்வப்போது வெள்ளித்திரையிலும் தலைகாட்டவே செய்கிறார் ராதிகா. தமிழ் மட்டுமல்லாது நீண்ட நாட்களாக தொடர்பே இல்லாமல் இருந்த மலையாளத்தில் கூட 24 வருடங்கள் கழித்து 'ராம்லீலா' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இப்போது தெலுங்கிலும் ஒரு படத்தில் நத்து வருகிறார் ராதிகா. படத்தின் பெயர் 'ராஜா தி கிரேட்'.
நாயகனாக ரவிதேஜா நடிக்க, படத்தை இயக்குனர் அனில் ரவிபுடி என்பவர் இயக்குகிறார். இதில் ராதிகாவுக்கு போலீஸ் அதிகாரி வேடம். ரவிதேஜா பார்வையற்றவராக நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. 1999ல் ராம்கோபால் வர்மா டைரக்ஷனில் வெளியான 'பிரேம கதா' படம்தான் தெலுங்கில் ராதிகா கடைசியாக நடித்தது. இந்தப்படம்தான் ஆந்திராவின் மிக உயர்ந்த விருதான நந்தி விருதையும் அவருக்கு பெற்றுத் தந்தது. இப்போது கிட்டத்தட்ட 18 வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கில் கால்பதிக்கிறார் ராதிகா..