ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மாஸ், சகுனி போன்ற படங்களில் நடித்த பிரணிதாவை,கோலிவுட் ரசிகர்கள், அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட மாட்டார்கள். 'தமிழின் அடுத்த முன்னணி நடிகை இவர் தான்' என, ரசிகர்களும் சரி, தமிழ் திரைப்பட உலகினரும், துாக்கி வைத்து கொண்டாடினர். ஆனால், அந்த படங்கள் தோல்வி அடைந்ததால், பிரணிதாவை, கோலிவுட் பக்கம் காண முடியவில்லை.
ஆனாலும், கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவ்ராஜ் குமார் பேன்றவர்களுடன், தொடர்ந்து நடித்து வந்தார். தற்போது, கன்னட திரையுலகமும், கதவை அடைத்துவிட்டது. இதனால், மாடலிங், பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளிலும், நகை கடை திறப்பு விழாக்களிலும் பங்கேற்கிறார்.
'சினிமாவுக்கு வருவதற்கு முன், மாடலிங் துறையில் தான் இருந்தேன். இப்போது, மீண்டும் அந்த துறையில் கவனம் செலுத்துகிறேன். சினிமாவை போல், இதில், டென்ஷன் எதுவுமில்லை; காசும், தாராளமாக கிடைக்கிறது' என்கிறார், பிரணிதா.