தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
ரன்பீர் கபூர் நடித்துள்ள ஜகா ஜசூஸ் படம் வருகிற ஜூலை 14-ம் தேதி ரிலீஸாவது உறுதியாகியிருக்கிறது. ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் காதலர்களாக இருந்தபோது ஆரம்பமான படம் தான் ஜகா ஜசூஸ். படம் முடிவதற்குள்ளேயே இருவருக்கும் இடையே மனகசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ஆனாலும் தங்கள் காதல் முறிவை காட்டிக்கொள்ளாமல் படத்தை முடித்து கொடுத்தனர். ரொமான்ட்டிக் படமாக உருவாகியுள்ள இப்படத்தை அனுராக் பாசு இயக்கியுள்ளார். சித்தார்த் ராய் கபூருடன் இணைந்து ரன்பீர் மற்றும் அனுராக் ஆகியோரும் தயாரித்திருக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில் ஏற்கனவே ஜூலை 14-ம் தேதி ஜகா ஜசூஸ் படம் ரிலீஸாகும் என்று தகவல் வெளியான நிலையில் இப்போது படக்குழுவும் அதை உறுதி செய்திருக்கிறது. அதோடு ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு இருக்கிறது. இதனிடையே ஜகா ஜசூஸ் படத்தின் டிரைலரை இந்த மாத இறுதியில் வெளியிட உள்ளனர்.