மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
தோனி படத்திற்கு பிறகு சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் வெளியாக உள்ள படம் ராப்தா. சுஷாந்த் ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்திருக்கிறார். தினேஷ் விஜன் இயக்க, பூஷண் குமார் மற்றும் தினேஷ் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். மகதீரா பாணியில் சரித்திரம் கலந்த ரொமான்ட்டிக் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள கிர்த்தி சனோனும், சுஷாந்த் சிங் ராஜ்புட்டும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.
இதுப்பற்றி ராப்தா புரொமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கிர்த்தி சனோனிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இதுபோன்ற வதந்திகள் என்னை ஒருபோதும் பாதிக்காது. ஆரம்பத்தில் இதுபோன்ற செய்திகளை நானும் படித்திருக்கிறேன், இப்போது இதுபோன்ற செய்திகளை படிப்பதையே நிறுத்திவிட்டேன். என்னை பற்றியும் சுஷாந்த் பற்றியும் வரும் செய்திகள் யாவும் கட்டுகதைகள் தான்" என்று கூறியுள்ளார்.
ராப்தா படம் வருகிற ஜூன் 9-ம் தேதி ரிலீஸாக உள்ளது.