Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கபாலியை தொடர்ந்து "காலா" : ரஜினியின் புதிய பட தலைப்பு

25 மே, 2017 - 10:12 IST
எழுத்தின் அளவு:
Rajinis-new-movie-titled-as-Kaala

தனுஷ் தயாரிப்பில், ரஞ்சித் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் புதிய படத்திற்கு காலா - கரிகாலன் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கபாலி படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணி இணைந்துள்ளது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹிமா குரோஷி கதாநாயகியாக நடிக்கிறார். முக்கியமான ரோலில் சமுத்திரகனி நடிக்க இருக்கிறார். இது ரஜினி நடிக்கும் 164-வது படமாகும்.


படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் கூடிய தலைப்பை இன்று அறிவிப்பதாக நேற்று தனுஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று(மே 25-ம் தேதி) காலை 10 மணிக்கு தனுஷ், தனது டுவிட்டரில் ரஜினியின் 164-வது படத்தின் தலைப்பை வெளியிட்டார். படத்திற்கு காலா என்று பெயர் வைத்திருக்கிறார்கள், கூடவே கரிகாலன் என்ற அடைமொழியும் இடம்பெற்றுள்ளது. கரிகாலனின் சுருக்கம் தான் இந்த காலாவாம்.


கபாலி படத்தில் ஒரு போஸ்டரில் ரஜினி, ஆக்ரோஷமாக கத்துவது போன்று, காலா படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரிலும் ரஜினி, பின்னணியில் ஆக்ரோஷமாக கத்த, சிவப்பு கலரில் காலா படத்தின் தலைப்பு இடம்பெற்றுள்ளது. போஸ்டரை பார்க்கும்போது இதுவும் ஒரு தாதா பின்னணியில் தான் உருவாக இருப்பதாகவே தோன்றுகிறது.


மும்பை தாராவி பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால் மும்பையில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர். பின்னர், சென்னையின் புறநகரான பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள தாராவி குடிசை செட்டில் தொடர்ந்து படமாக்குகிறார்கள். கபாலியை தொடர்ந்து காலா படத்திற்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.


தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் காலா படம் வெளியாகிறது. ஆகையால் சம்பந்தப்பட்ட மொழிகளிலும் காலா படத்தின் டைட்டிலை வெளியிட்டிருக்கிறார் தனுஷ். மேலும் காலா படத்தின் பர்ஸ்ட் லுக், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.


Advertisement
அஜித் கடந்த வந்து பாதையை சொல்லும் விவேகம் தீம் சாங்அஜித் கடந்த வந்து பாதையை சொல்லும் ... விநியோகஸ்தர்கள் கொடுத்த நம்பிக்கையில் சரவணன் இருக்க பயமேன் படத்தை வெளியிட்டோம் - உதயநிதி விநியோகஸ்தர்கள் கொடுத்த ...


வாசகர் கருத்து (30)

Dol Tappi Maa - NRI,இந்தியா
25 மே, 2017 - 17:44 Report Abuse
Dol Tappi Maa காலா பதிலா 'பீலா' இன்னு பேர் வைச்ச சரியாக இருக்கும் . கரிகாலனுக்கு நாம் செய்யும் மரியாதை அது வாக தான் இருக்கும் .
Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
25 மே, 2017 - 16:54 Report Abuse
JEYAM தமிழன் JEYAM நல்லவேளை காலரா ன்னு பேரவைக்கவில்லை...அவனவனுக்கு பிச்சிகிட்டு போக்கியிற போகுது ....
Rate this:
JEYAM தமிழன் JEYAM - Tamil Nadu,இந்தியா
25 மே, 2017 - 16:52 Report Abuse
JEYAM தமிழன் JEYAM நல்லவேளை காலரா என்று வைக்கவில்லை...அவனவனுக்கு பிச்சிக்கிட்டு போகுது....
Rate this:
R Sanjay - Chennai,இந்தியா
25 மே, 2017 - 16:33 Report Abuse
R Sanjay "kirsh" நாங்க யாரும் போயி பாக்க போறதில்ல, அடிக்கடி தேட்டர்ல போயி படம் பாக்குறவங்களைத்தான் யாரும் திருத்தமுடியாது, - "Rajni Rasign" - நா யாரையும் பார்த்து பொறாமை படைக்கக்கூடியவன் அல்ல, என் கடின உழைப்பால் முயற்சியால் நல்லவேளையில் நல்ல நிலையில் தான் நான் உள்ளேன், எனக்கு வரும் வருமானத்தில் என்னால் இயன்ற அளவு உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்து கொண்டுதான் இருக்கிறேன், நீங்க சொல்லுங்க உங்க வாழ்க்கையில் நீங்கள் நல்ல தரமான ஓட்டலில் சாப்பிட்ட சாப்பாட்டை extra ஒரு பார்சல் செய்து தெருவில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு ஒருவேளை யாவது வாங்கி கொடுத்து இருக்கிறீர்களா? இல்லை தெருவில் சுற்றித்திரியும் ஆடுமாடு நாய் போன்ற விலங்குளுக்கு ஒரு வேளையாவது கனிவாக அதன் பசியை போக்கி இருக்கிறீர்களா? உங்களுக்கு தேவை சினிமா சினிமா சினிமா சினிமா சினிமா சுகம் மட்டுமே. ரசிகர்கள் என்கின்ற போர்வையில் உங்களை போன்றவர்களை பார்த்து பரிதாபம் தான் கொள்கிறேன், இந்த நடிகரால் நாட்டிற்கு என்ன லாபம் கிடைத்துவிட்டது? இவரால் பீடி சிகிரெட்டு குடிப்பழக்கம்னு, ஒரு தலைமுறையே அழிந்துவிட்டது, எனக்கு தெரிந்தவர் தளபதி படம் பார்த்துவிட்டு அதில் ரஜினி ஏற்கும் அடியாள் வேலை போல, நிஜத்தில் ஒரு தாத்தாவிடம் சென்று தலைமுடியை ரஜினி போலவே வழித்துக்கொண்டு அடியாள் வேலைக்கு சேர்ந்தார், அவரின் வாழ்க்கை அப்படியே நாசமாகி போனது. MGRரைப்பார்த்து அன்றைய தலைமுறையில் பெரும்பாலானவர்கள் குடிப்பழக்கத்தையே விட்டவர்கள் ஏராளம், இதே ரஜினியால் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எத்தனை எத்தனை பேர் என்று கணக்கு போட்டு மாளாது. தன் படங்கள் (பாபா வரை) அனைத்திலும் புகைப்பழக்கம் குடிப்பழக்கம் என்று சினிமா மூலம் மக்களுக்கு போதை ஏற்றிவிட்டு தற்போது குடிக்காதீர்கள் தீய பழக்கத்தை விட்டுவிடுங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம். ஏழை மற்றும் நடுத்தர மக்களே ரசிகர்களாக, நடிகர் நடிகைகளை சுகமாக வாழவைக்கிறார்கள், எந்த ஒரு நடிகனா அல்லது நடிகையோ தன்னை வாழவைத்த ஏழை/நடுத்தர ரசிகனில் நல்லவன் யாரோ அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து திருமணம் செய்து இருக்கிறார்களா? இல்லை தன்னை வாழவைத்த ரசிகர்களுக்குத்தான் தன் மகளையோ அல்லது மகனையோ திருமணம் செய்து கொடுத்து இருக்கிறார்களா? நடிக நடிகர்களின் பார்வையில் ரசிகர்களாகிய நீங்கள் எல்லாம் ஒருமுறை உபயோகப்படுத்தி பயன்படுத்திவிட்டு தூக்கி எரியும் USE & THROW குப்பைகள் மட்டுமே, என்றுமே அவர்கள் வாழ்நாள் முழுவது உங்களை வெறும் செருப்பாக மட்டுமே பயன்படுத்திக்கொள்வார்கள். ஆடுங்கள் நான்றாக ஆடுங்கள் தற்போது இந்திய நாட்டில் மக்களுக்கு உயிர் பயம் என்கின்ற ஒரு விஷயம் இல்லை, அந்த உயிர் பயம் வெகு விரைவில் போர் மூலம் வரும், அப்போது உங்களை காப்பவரே நீங்கள் தெய்வமாக கொண்டாடுவார்கள் மாறாக இந்த நடிகர் நடிகைகளை அல்ல. அப்போது தெரியும் உண்மையான HERO நிஜவாழ்க்கையில் யார் என்று.
Rate this:
25 மே, 2017 - 16:25 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி ரஜினியின் ஒரு படம் பார்த்தாலும் உசுரு தப்ப முடியாது, கைப்புள்ள உசுர காப்பாத்திக்கோ.
Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mannar Vagaiyara
  • மன்னர் வகையறா
  • நடிகர் : விமல்
  • நடிகை : ஆனந்தி
  • இயக்குனர் :பூபதி பாண்டியன்
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு
  Tamil New Film Kombu
  • கொம்பு
  • நடிகர் : லொள்ளுசபா ஜீவா
  • நடிகை : திஷா பாண்டே
  • இயக்குனர் :இ. இப்ராகிம்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in