600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் 164 படத்தின் படப்பிடிப்பு வருகிற 28-ஆம் தேதி மும்பையில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ஹிமா குரோஷி கதாநாயகியாக நடிக்கிறார்.
நானா படேகர் உட்பட வேறு சில பாலிவுட் நடிகர்களும் நடிக்கும் இப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் சமுத்திரகனி. இந்தப் படத்துக்காக இரண்டு மாதங்கள் கால்ஷீட் கொடுத்திருப்பதால், தொண்டன் படத்தை அடுத்து இயக்க திட்டமிட்டிருந்த கிட்ணா படத்தை ஒத்திவைத்துள்ளார்.
மும்பை தாராவி பின்னணியில் நடக்கும் கதை இது என்பதால் மும்பையில் படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்க உள்ளனர். பின்னர், சென்னையின் புறநகரான பூந்தமல்லியில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் போடப்பட்டுள்ள தாராவி குடிசை செட்டில் தொடர்ந்து படமாக்குகிறார்கள். 'கபாலி'யை தொடர்ந்து இந்த படத்திலும் சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.