பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
துல்கர் சல்மான் நடிப்பில் சூப்பர்ஹிட் படமான 'சார்லி'யை இயக்கியவர் மார்ட்டின் பரக்கத். இவரும், நடிகர் ஜோஜூ ஜார்ஜும் இணைந்துதான் அந்தப்படத்தை தயாரித்திருந்தார்கள். அந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அவர்கள் தயாரிக்கும் படம் ஹீரோயினை மையப்படுத்தியதாகும். இதில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் பெயர் 'உதாகரணம் சுஜாதா'. படத்தை பேந்தம் பிரவீண் என்பவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் ஒரு டீனேஜ் பெண்ணுக்கு தாக சுஜாதா என்கிற கேரக்டரில் நடிக்கும் மஞ்சு வாரியர், யாரிடம் எது பேசினாலும் ஏதாவது உதாரணம் ஒன்றை சொல்லித்தான் பேசவே ஆரம்பிப்பாராம். அதற்காகவே இப்படி ஒரு டைட்டில் வைத்துவிட்டர்களாம். இந்தப்படத்தில் மஞ்சு வாரியர் மட்டுமல்லாமல், ஐ.ஏ.எஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் மம்தா மோகன்தாஸ்.