பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு சூப்பர், டூப்பர் ஹிட் கொடுத்த இயக்குனர் அடுத்த படத்திற்கு ஆறு மாதம் காத்திருக்கலாம், ஒரு வருடம் கூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால் 'பிர்பிமம்' என்கிற மெகா ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், அந்தப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் முடியப்போகும் தருவாயில் தான் தனது அடுத்த படம் குறித்தே வாய் திறந்துள்ளார். அதுகூட தனது அடுத்த படம் தமிழில் தான் என்று சொன்னவர், சில நாட்கள் மௌனம் காத்து வந்தார். இப்போது அந்தப்படம் எப்படி இருக்கும், எப்படி இருக்காது என்பது பற்றி லைட்டாக கோடிட்டு காட்டியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
அது அவரது உந்திய 'நேரம்' படம் மாதிரி நகைச்சுவை படமாகவோ அல்லது பிரேமம் படம் போல காதல் கதையாகவோ இருக்காது என்பதை உறுதிப்படுத்திவிட்டார். இந்தமுறை அவர் கையில் எடுத்திருப்பது மியூசிக்கல் சப்ஜெக்ட். இசை எனும் கடலில் வெறும் கால்களை மட்டுமே நனைக்கும் அளவுக்குத்தான் எனக்கு அதில் பிரிச்சயம் உண்டு. ஆனால் இசை பற்றி படம் பண்ணவேண்டும் எனும்போது அதற்குள் குதித்து நீந்திப்பழகினால் தானே முடியும். அதற்குத்தான் இவ்வளவு காலதாமதம் ஆனது என விளக்கம் அளித்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.