மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
வான்மதி, தேவா, சொக்கத்தங்கம், யோகி ஆகிய படங்களில் நடித்தவர் சுவாதி. கொஞ்ச காலம் ஸ்வாதிகா என்ற பெயரில் நடித்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன் கிரண் என்ற சாப்ட்வேர் என்ஜீனியரை மணந்துகொண்டு ஆந்திராவில் வசித்து வரும் சுவாதி, திருமணத்துக்குப் பின் படங்கள் எதிலும் நடிக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் சுவாதிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இருவரும் நலமாக உள்ளனர். குழந்தைக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. குழந்தையையும், குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதே என் வேலை. இனிமேல் சினிமாவுக்கு வரும் எண்ணமே இல்லை. நடித்தவரை போதும், என்று பேட்டியொன்றில் கூறியிருக்கிறார் சுவாதி.