'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ரூ.300 கோடி பட்ஜெட்டில் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் சரித்திர படம் சங்கமித்ரா. சுந்தர்.சி இயக்கத்தில் ஸ்ருதிஹாசன் டைட்டீல் ரோலில் நடிக்கும் இந்த படத்தில் ஜெயம்ரவி-ஆர்யா நாயகர்களாக நடிக்கிறார்கள். பாகுபலி-2விற்கு பிறகு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டதால் உலக அளவில் இப்படம் இப்போதே பேசப்படத் தொடங்கியிருக்கிறது.
மேலும், இப்பட படப்பிடிப்பை தொடங்குவதற்கு முன்பே பர்ஸ்ட் லுக்கை உலக அளவில் வெளியிட்ட சங்கமித்ரா படக்குழு, அதைத் தொடர்ந்து சங்கமித்ரா திரைக்கதை புத்தகத்தையும் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒப்படைத்திருக்கிறார்கள். இதேபோல் அப்படத்தின் டீசர், ஆடியோ, பட வெளியீடு என ஒவ்வொன்றயும் பிரமாண்டப்படுத்தி, பாகுபலி-2வுக்கு இணையாக உலக அளவில் சங்கமித்ராவை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.