ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 ஆவது தயாரிப்பாக பரபரப்பாக உருவாகிவருகிறது 'விஜய் 61'. அட்லி இயக்கி வரும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.
விஜய் 61 படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கின்றனர். படத்தில் மூன்று பேருக்கும் பாடல் காட்சி உண்டு. அதை வெவ்வேறு லொகேஷன்களில் எடுக்க திட்டமிட்ட அட்லி, நித்யா மேனனும், விஜய்யும் சம்மந்தப்பட்ட பாடல் காட்சியை கடும் வெயிலில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மாரில் படமாக்கினார். ராஜஸ்தானில் நடைபெற்ற படப்பிடிப்பைத் தொடர்ந்து தற்போது வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளது 'விஜய் 61' படக்குழு.
தற்போது ஐரோப்பாவில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் படத்தின் இன்னொரு நாயகியான காஜல் அகர்வால், விஜய்யுடன் நடித்து வருகிறார். இந்தப்பாடல் காட்சியைத் தொடர்ந்து அடுத்த மாதம் சென்னையில் துவங்க உள்ள அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் படத்தின் மூன்றாவது நாயகியான சமந்தா கலந்து கொள்கிறார்.
அப்போது அவருக்கும் விஜய்க்குமான பாடல் காட்சி படமாக்கப்படவிருக்கிறது. இந்தப் பாடல் காட்சியை சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் செட் போட்டு எடுக்க உள்ளனர்.