‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
இதுவும் மோகன்லால் பிறந்தநாள் தொடர்பான இன்னொரு விஷயம் தான். நேற்று மோகன்லாலின் பிறந்தநாளை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் அனைவரும் சோஷியல் மீடியா மூலமாக தங்களது வாழத்துக்களை தெரிவித்தனர்.. இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனும் மோகன்லாலுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து கூறியிருந்தார். அப்போது அவரிடம் நம் தமிழ் ரசிகர் ஒருவர் மோகன்லாலை வைத்து மங்காத்தா ஸ்டைலில் ஒரு படத்தை எப்போது தரப்போகிறீர்கள் என கேட்டிருந்தார்.
அதற்கு அல்போன்ஸ் புத்ரன் சொன்ன பதில் தான் வித்தியாசமானதாக இருந்தது.. “என்னை பொறுத்தவரை லாலேட்டனை யார் என்று கேட்டால் கிளிண்ட் ஈஸ்ட்வுட், மார்லன் பிராண்டோ, அல் பசினோ, ராபர்ட் டி நீரோ ஆகியோருக்கெல்லாம் மேலானவராக நினைத்துக்கொண்டு இருக்கிறேன்.. அப்படிப்பட்டவரை வைத்து மங்காத்தா ஸ்டைல் படம் எடுக்கணுமா அல்லது வோர்ல்ட் கிளாஸ் லெவலில் ஒரு படம் எடுக்கணுமா” என பதில் கேள்வி கேட்டுள்ளார்.