ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தங்கல் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் என்ற படத்தில் நடித்து வருகிறார். விஜய் கிருஷ்ணா ஆச்சார்யா இயக்கும் இப்படத்தை ஆதித்யா சோப்ரா தயாரிக்கிறார். ஜூன் முதல் தேதியிலிருந்து இப்படத்தின் சூட்டிங் துவங்க உள்ளது. அடுத்த ஆண்டு தீபாவளியன்று இப்படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், தங்கல் தங்கல் பாத் சாலி ஹை என்ற விவாத நிகழ்ச்சியில் நடிகர் அமிர்கான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமிர்கான், தான் அடுத்து நடிக்கும் துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் படம் ஹாலிவுட் படங்களான பைரேட்ஸ் ஆப் கரீபியன் மற்றும் இண்டியானா ஜோன்ஸ் ஆகியவற்றில் தழுவல் என வெளியான வதந்திகளை திட்டவட்டமாக மறுத்தார்.
இது குறித்து அமிர்கான் கூறுகையில், துக்ஸ் ஆப் இந்தோஸ்தான் எந்த படத்தின் தழுவல் கதையும் இல்லை. இது ஆக்ஷன் கலந்த சாகச படமாக இருக்கலாம். ஆனால் இப்படத்தின் கதை எந்த படத்தின் கதையுடன் ஒத்துப் போகக் கூடியது அல்ல. ஆயிரக்கணக்கான ஆக்ஷன் படங்கள் வந்துள்ளன. அவற்றில் பைரேட்ஸ் ஆப் கரீபியன், இண்டியானா ஜோன்ஸ் உள்ளிட்ட படங்களும் ஒன்று.இவைகளும் ஆக்ஷன் படங்கள் தான்.
இந்த படங்களுக்கும் எனது படத்திற்கும் உள்ள ஒற்றுமை, ஆக்ஷன் படம் என்பது மட்டுமே. ஆனால் கதை வேறுபட்டது. இப்படத்தில் எனது கேரக்டரும் வேறு எந்த கேரக்டருடனும் ஒத்து போகக் கூடியது இல்லை என தெரிவித்துள்ளார்.