தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற ஆபாசப்படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு மூன்று வேடங்களில் நடித்து வரும் படம் 'AAA'.
இதற்கு 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' என்று அர்த்தம் சொல்லப்பட்டாலும் 'AAA' படம் ரேன்ஜுக்கு சில காட்சிகளும், வசனங்களும் இடம்பெற்றுள்ளதாக சொல்லப்படுகிறது.
யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்த படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருக்கிறார். 'ரத்தம் என் ரத்தம்...' என்று துவங்கு இந்த பாடல், சிம்புவின் அறிமுக பாடலாக படத்தில் இடம்பெறுகிறது. யுவன் இசையில் இந்தப் பாடலை சிம்புவே பாடியுள்ளார். சிம்பு நடிக்கும் படத்திற்கு கவிஞர் வைரமுத்து பாடல் எழுதியது இதுதான் முதல் முறை!
இந்தப் பாடலை பிரம்மாண்டமானமுறையில் படமாக்க வேண்டும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனிடம் சொல்லி இருக்கிறார் சிம்பு. ஏற்கனவே படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகமாகிவிட்டதால் நொந்துபோயிருக்கும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், பெரிய அளவில் செலவு பண்ண மாட்டடேன் என்று சொல்லிவிட்டாராம்.
இந்த விஷயத்தை இயக்குநர் ஆதிக் சிம்புவின் காதில் போட, அதைக் கேட்டு கடுப்பாகிவிட்டாராம் சிம்பு.
தயாரிப்பாளர் இப்படி செய்தால் 'AAA' படத்தை பார்க்காதீர்கள் என்று ட்விட்டர் மூலம் என்னுடைய ரசிகர்களுக்கு அறிவிப்பு செய்வேன் என்று மிரட்டுகிறாராம் சிம்பு.