பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'டிமான்ட்டி காலனி' படத்தின் மூலம் வரவேற்பைப் பெற்றவர் புதுமுக இயக்குநர் அஜய் ஞானமுத்து. இவரது இயக்கத்தில் உருவாகிவரும் இரண்டாவது படம் இமைக்கா நொடிகள். இந்தப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
இமைக்கா நொடிகள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அதர்வாவின் கையில் அனுராக்கின் மாஸ்க் இருப்பது போலவும், நயன்தாரா கையில் அதர்வாவின் முகமூடியும், அனுராக்கின் கையில் நயன்தாராவின் முகமூடியும் இருப்பதுபோல் இந்த போஸ்டரை வடிவமைத்திருந்தனர்.
கடத்தலை மையமாக வைத்து கதை அமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா 5 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறார்.
விரைவில் ரிலீஸ் செய்ய முடிவு செய்து படத்தின் வியாபாரம் பேசத்தொடங்கிய தயாரிப்பாளர்களுக்கு பேரதிர்ச்சி. நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு, திருநாள், காஷ்மோரா, மற்றும் கடைசியாக அவரது நடிப்பில் வெளியான டோரா ஆகிய படங்களின் தோல்வி காரணமாக இமைக்கா நொடிகள் படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லையாம். படத்தை வாங்க முன்வந்த ஒரு சிலரும் மிகவும் குறைவான தொகைக்கு படத்தை கேட்கிறார்களாம். அதனால் பெரும் சோகத்தில் இருக்கிறது தயாரிப்பு தரப்பு. இந்த யதார்த்தம் புரியாமல் நாலு கோடி சம்பளம் கேட்க ஆரம்பித்துள்ளாராம் நயன்தாரா.