ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
'துள்ளுவதோ இளமை' மூலம் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த தனுஷ், தற்போது 15 ஆவது வருடத்தை எட்டியுள்ளார். இந்த 15 வருடங்களில் நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களைக் கண்ட தனுஷ், 'பா.பாண்டி' படம் மூலம் இயக்குனராகவும் ஜெயித்துள்ளார்.
அதேபோல் கோலிவுட்டில் மட்டுமின்றி, பாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டிய தனுஷ், தற்போது 'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் மூலம் ஹாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடிப் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
ஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் ஃபகிர் எனும் கேரக்டரில் தனுஷ் நடிக்கிறார். இந்தப்படத்தின் முதல் ஷெட்யூலுக்கான படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன் மும்பையில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது.
'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' படத்தின் படப்பிடிப்பை இந்தியாவில் மட்டுமின்றி, பெல்ஜியம், பாரிஸ், ரோம் ஆகிய நாடுகளிலும் நடத்த உள்ளனராம். மும்பை ஷெட்யூல் முடிந்த பிறகு சில மாத இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அந்த இடைவெளியில் வட சென்னை படத்தில் நடித்து முடிக்க திட்டமிட்டிருக்கிறார் தனுஷ். இதை முடித்த பிறகு ஒரு இந்திப் படத்திலும் நடிக்க கால்ஷீட் கொடுத்திருக்கிறாராம்.