ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் ஹாலிவுட் படம் பைரேட்ஸ் ஆஃப்தி கரீபியன். கடல் கொள்ளைக்காரர்களை மையாக உருவாக்கப்படும் பேண்டஸி படம். இதன் முதல் பாகம் 2003ம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு 3 பாகங்கள் வெளிவந்து அனைத்துமே வெற்றி பெற்றது. கடைசியாக 6 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி பாகம் வந்தது. இப்போது இதன் 5வது பாகம் டெட் மேன் டெல் நோ டேல்ஸ் என்ற துணை தலைப்புடன் வெளிருகிறது.
பைரேட்ஸ் ஆஃப் கரீபினியன் ஆஸ்தான ஹீரோ ஜானி டாப்தான் இதிலும் ஹீரோ. ஜேவியர் பார்டன், பிரண்டான் டவ்ட்டீஸ், கெவின் மெக்ளே உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். ஜோச்சின் ரோனிங், எஸ்பன் சண்ட்பெர்கன் இணைந்து இயக்கி உள்ளனர். பால் கேமரூன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஜியேப் ஜேனியில் இசை அமைத்துள்ளார்.
வால்ட் டிஸ்னி தயாரிதுள்ள இந்தப்படம் வருகிற 26ந் தேதி உலகம் முழுவதும் வெளிவருகிறது. இந்தி, தமிழ், தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழில் சல்ஸரின் வஞ்சம் என்று துணை தலைப்பு வைத்திருக்கிறார்கள். 3டி, ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்திலும் வெளிவருகிறது.