பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள திரையுலகத்தினர் அனைவராலும் 'லாலேட்டன்' என செல்லமாக அழைக்கப்படும் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் இன்று தனது 57வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். கடந்த வருடத்தில் கூட மோகன்லாலின் பிறந்தநாள் வழக்கமான ஒன்றாகவே கடந்துபோனது.. ஆனால் இந்த வருடம் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலான ஒன்று.. காரணம் கடந்த வருடம் அவரது பிறந்தநாளை தொடர்ந்து வந்த நாட்களில் வெற்றி மேல் தொடர் வெற்றியாக வரிசையாக வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். 'புலி முருகன்' படம் மூலம் மலையாள சினிமாவின் வியாபார எல்லையை 150 கோடி ரூபாய் வரை உயர்த்தியுள்ளார்.
மிக பிரமாண்டமாக ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் 'மகாபாரதம்' படத்தில் நடிக்க இருக்கிறார்.. ஆக இத்தனை சாதனைகளும் கடந்த ஒரு வருடத்திற்குள் மோகன்லாலை வந்து சேர்ந்துள்ளன. அதனால் அவருக்கு எப்படியோ அவரது ரசிகர்களுக்கு இது கொண்டாட்டமான பிறந்தநாள் என்பதில் ஐயமில்லை. 1978ஆம் வருடம் 'திரநோட்டம்' என்ற படத்தின் மூலம் தனது திரையுலக வாழ்க்கையை துவங்கிய மோகன்லால் இப்போது வெற்றிகரமாக 37வது ஆண்டில் அதே கம்பீரத்துடன் உலா வந்துகொண்டு இருக்கிறார்.
எந்த கதாபாத்திரமானாலும் அதில் தன்னை 100 சதவீதம் புகுத்திக்கொண்டு அந்த கேரக்டருக்கு உயிர்கொடுக்கும் வல்லமை அவருக்கு இருப்பதால் தான் அவரை 'கம்ப்ளீட் ஆக்டர்' என கேரள சினிமாவே கொண்டாடுகிறது. மலையாளம் தவிர மற்ற மொழிகளிலும் தற்போது நடித்துவரும் மோகன்லாலுக்கு அனைத்து மொழிகளும் சிவப்புக்கம்பளம் விரிக்கின்றன. இன்று 57 வயதை தொட்டு பிறந்தநாள் காணும் லாலேட்டனுக்கு நமது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வோம்..