தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
காஜல்அகர்வாலின் மார்க்கெட் சரியப்போகிறது என்கிற நிலை இருந்தபோதுதான் அஜீத்தின் விவேகம் படத்தில் கமிட்டானார். அதனால் இதுவரை அஜீத்துடன் நடிக்கவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அந்த ஏக்கத்தை இந்த படம் தீர்த்து விட்டது என்று பெருமையாக சொல்லிக்கொண்டார் காஜல். அதைத்தொடர்ந்து துப்பாக்கி, ஜில்லா படங்களுக்குப்பிறகு மீண்டும் விஜய்யுடன் 61வது படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படி அடுத்தடுத்து தமிழில் இரண்டு முன்னணி ஹீரோக்களின் படங்கள் கிடைத்ததால் சந்தோசத்தில் திக்குமுக்காடிப்போனார் காஜல்அகர்வால்.
இந்த நிலையில், அஜீத்துடன் நடித்து வரும் விவேகம் படத்திற்காக ஐரோப்பாவில் தான் நடித்து வந்த சில முக்கியமான லொகேசன்களை தனது இணைய பக்கத்தில் அவ்வப்போது வெளியிட்டு வந்தார் காஜல். அந்த லொகேசன் அனுபவங்களைப்பற்றி இப்போது அவர் கூறுகையில், ஐதராபாத்தில் ஒரு தெலுங்கு படத்தில் சுட்டெரிக்கும் கோடை வெப்பத்தில் நடித்து விட்டு அஜீத்துடன் நடிக்க ஐரோப்பா சென்றேன். அங்கு சூரியனையே பார்க்க முடியவில்லை. அங்குள்ள குளிர்ந்த பருவநிலை என்னை சிலிர்க்க வைத்து விட்டது.
அதையடுத்து சைபீரியாவின் அழகான பகுதிகளில் நடந்த படப்பிடிப்பு, மாசிடோனியா பள்ளத்தாக்கு பகுதி, போலந்து நாடு என விவேகம் படத்திற்காக நான் சென்ற எல்லா லொகேசன்களுமே என்னை மெய்மறக்க வைத்து விட்டன என்கிறார் காஜல்அகர்வால்.