விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் |
முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் பாடல் மற்றும் முக்கிய காட்சிகள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே இணையதளங்களில் வெளியாகி விடுவதால், பலத்த செக்யூரிட்டி போட்டுதான் படப்பிடிப்பு நடத்துகிறார்கள். சிலர் மொபைல்போன்களை படப்பிடிப்பு தளத்திற்குள் கொண்டு செல்லவே தடை விதித்து வருகிறார்கள். இந்தநிலையில், விஜய் நடித்து வரும் 61வது படத்தின் சில புகைப்படங்கள் ஆரம்பத்திலேயே வெளியானது. முக்கியமாக அப்பாவாக நடிக்கும் விஜய்யின் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து பலத்த செக்யூரிட்டி போட்டுதான் படமாக்கி வருகிறார் அட்லி.
ஆனால் இந்த நேரத்தில் தற்போது விஜய்-காஜல் அகர்வால் சம்பந்தப்பட்ட டூயட் பாடல் காட்சி ஒன்றும் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது. இதையடுத்து விஜய்-அட்லி ஆகிய இருவரும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். யூனிட்டில் வேலை செய்த யாரோ தான் தங்களது மொபைல்போனில் படமாக்கி இப்படி வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இந்த செயலை செய்தவர் யார் என்று யூனிட் நபர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகிறாராம் அட்லி.