பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகர் ஜாக்கி ஷெரப்பின் வாரிசு டைகர் ஷெரப். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இவருக்கு ஹாலிவுட் படமான ராம்போ மீது அலாதி பிரியம். மேலும் சண்டை படங்களிலும் பெரிதும் ஆர்வம் கொண்ட டைகர், இப்போது ராம்போ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கில் நடிக்க உள்ளார். இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்க சித்தார்த் ஆனந்த் பிக்சர்ஸ், கேப்பிட்டல் வென்சர்ஸ் மற்றும் ஒரிஜினல் என்டர்டெயின்ட்மென்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். முறையான ரீ-மேக் உரிமம் பெற்று இப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து டைகர் ஷெரப் கூறியிருப்பதாவது... "சில்வர் ஸ்டாலோன் போன்று வர வேண்டும் என்று சின்ன வயது முதலே உழைத்து வருகிறேன். அவருடைய ரோலில் நான் நடிப்பது சந்தோஷம், இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தான். அவரை மாதிரி என்னால் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் கடுமையாக இந்தப்படத்திற்காக உழைப்பேன். இப்படத்தின் படப்பிடிப்பை எண்ணி ஆவலாக உள்ளேன்" என்றார்.
ஹீரோயின் உள்ளிட்ட பிற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடக்கிறது. அனைத்து பணிகள் முடிந்ததும், 2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ராம்போ படத்தின் ஷூட்டிங்கை ஆரம்பிக்க உள்ளனர்.