திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருந்தவர் சுனில் ஷெட்டி. தற்போது முன்பு போன்று படங்களில் நடிப்பது இல்லை, போதிய வாய்ப்புகள் இல்லாததே காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே. சுனில் ஷெட்டியின் மகன், அஹன் ஷெட்டி சினிமாவில் களமிறங்க உள்ளார்.
தன் மகன் சினிமாவில் நடிக்க இருப்பது குறித்து சுனில் ஷெட்டி கூறியிருப்பதாவது... "அஹன் தற்போது லண்டனில் நடிப்பு பயிற்சி பெற்று வருகிறார். அவனது முதல்படத்தை சாஜித் தயாரிக்கிறார். நல்ல ஒருவரின் கையால் தான் அறிமுகமாக உள்ளார். இருந்தாலும் திறமையுடன் கூடிய அதிர்ஷ்டமும் இருந்தால் தான் இந்த துறையில் நிலைத்து நிற்க முடியும். சினிமாவில் தயார்படுத்த எனது மகன் கடுமையாக உழைத்து வருகிறான், அதற்கான பலன் கிடைக்கும் என நம்புகிறேன்" என்றார்.