'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
மாடலிங் துறையில் இருந்து சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லிஸா ஹெய்டன். ஆயிஷா, ராஸ்கல்ஸ், குயின், ஹவுஸ்புல்-3 போன்ற படங்களில் நடித்த லிஸா, லண்டனை சேர்ந்த தொழிலதிபர் டினோ லால்வனியை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக லிஸா சிலமாதங்களுக்கு முன்னர் தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதோடு தான் கர்ப்பமாக இருக்கும் காலத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் லிஸாவுக்கு மே 17-ம் தேதி அழகான ஆண் குழந்தை பிறந்தது. தாயும், சேயும் நலமாக உள்ளார்கள். தன், குழந்தை மற்றும் கணவரோடு இருக்கும் போட்டோவையும் லிஸா வெளியிட்டுள்ளார்.