Advertisement

சிறப்புச்செய்திகள்

ஆயுஸ் சர்மாவுக்கு ஜோடியாக கத்ரீனா கைப்.? | ஒருவாரம் முடிவில் ஹாப் கேர்ள்பிரண்ட் - ஹிந்தி மீடியம் வசூல் | பிக்பாஸ் நிகழ்ச்சி என்னை தமிழக குடும்பத்துக்குள்ளும் கொண்டு செல்லும் - கமல் | தெலுங்கில் அடியெடுத்து வைக்கும் எழுத்தாளர்கள் சுபா..! | 103 வயதான பாட்டியின் ஆசையை நிறைவேற்றிய அமிதாப் பச்சன் | 18 வருடங்களுக்கு பிறகு தெலுங்கில் கால் பாதிக்கும் ராதிகா..! | மோகன்லாலால் கனவு நனவானது ; ஆனந்த கண்ணீரில் லால் ஜோஸ்..! | ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது - கண்காணிக்கும் கமல் | யாரும் அரசியலுக்கு வர வேண்டாம் - கமல் அட்வைஸ் | சீக்கிரம் அரசியலுக்கு வாங்க : ரஜினிக்கு சத்ருகன் அழைப்பு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி பேச்சுக்கு பிரேம்ஜி மட்டுமே ஆதரவு

20 மே, 2017 - 12:47 IST
எழுத்தின் அளவு:

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் உருவாகிவிட்டது என பல அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வெற்றிடத்தை எப்படியாவது நிரப்பி விட வேண்டும் என பலரும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்த வரை அரசியல் பற்றியோ அதிமுக அரசு பற்றியோ எந்த ஒரு சினிமா நடிகரும் வாயைத் திறந்து விமர்சித்ததே இல்லை.


கமல்ஹாசன் படம், விஜய் படம் ஆகியவை வெளியீட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவித்த போது கூட பார்த்து, பார்த்துத்தான் சிலர் கருத்துக்களை வெளியிட்டார்கள். ஆளும் அரசை எதிர்த்துக் கொண்டால் பல சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் என்ற பயம்தான் அதிகம் இருந்தது.


ஜெயலலிதா மறைவுக்குப் பின் காட்சிகள் மாறின. சினிமா நடிகர்கள் பலரும் அரசியல் பேச ஆரம்பித்தார்கள். குறிப்பாக கமல்ஹாசன், ஜல்லிக்கட்டுப் போராட்டம் அவருக்கு சரியான களத்தை அமைத்துக் கொடுத்தது. தொடர்ந்து அரசியல் ரீதியான கருத்துக்களைப் பகிர்ந்து வந்த கமல்ஹாசனுக்கு மீண்டும் பணம் சம்பாதிக்கும் ஆசை வந்தது. பணம் வேண்டும் என்பதற்காக டிவி வரை சென்றுவிட்டார். அதை சொன்னது அவரே தான் என்பதை கவனித்தில் கொள்க.


ரசிகர்களைச் சந்திக்கப் போகிறேன், புகைப்படம் எடுக்கப் போகிறேன் என்று சொல்லி கடந்த 5 நாட்களாக ரசிகர்களைச் சந்தித்தார் தமிழ்த் திரையுலகத்தில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த். ஆரம்ப நாளிலும், கடைசி நாளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் விவாதப் பொருளாகின.


யார் யாரோ, அவருடைய பேச்சை விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சினிமா உலகத்தைச் சார்ந்த அநேகநபர்கள் இதுவரை ரஜினி பேச்சு பற்றி எதுவும் சொல்லவில்லை.


காமெடி நடிகரான பிரேம்ஜி மட்டுமே ரஜினியின் பேச்சை டிவிட்டரில் பகிர்ந்து 'தலைவா' என்று கமெண்ட் செய்திருக்கிறார். வேறு எந்த நடிகரும் ஆதரவு தெரிவித்தாகத் தெரியவில்லை. என்ன காரணமோ...?.


Advertisement
பிரபாசின் புதிய படம் ரூ.350 கோடிக்கு விற்பனையாகிறதுபிரபாசின் புதிய படம் ரூ.350 கோடிக்கு ... துப்பறியும் சாம்பு விஷால் துப்பறியும் சாம்பு விஷால்


வாசகர் கருத்து (2)

nijan - chennai,இந்தியா
21 மே, 2017 - 09:54 Report Abuse
nijan ரெண்டு பேருமே வெளங்காதவனுங்க..
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
20 மே, 2017 - 14:22 Report Abuse
Mirthika Sathiamoorthi என்ன பண்ணி தொலைக்கிறது எல்லோருக்கும் சூப்பர்ஸ்டார் பட்டம் மேல ஒரு கண்ணு... சூப்பர்ஸ்டார் அரசியலுக்கு வரமாட்டார்... நாம மொதல்ல பட்டம் வாங்குவோம் அப்புறம் அரசியலுக்கு வரலாம்ன்னு நெனச்சவங்க வாயில நம்ம தல மண்ண போட்டுட்டாரு அதுதான்..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Thupparivaalan
    • துப்பறிவாளன்
    • நடிகர் : விஷால்
    • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :மிஷ்கின்
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in