Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

43 வயதில் 16 வருடங்களாக கேன்ஸில் கலக்கும் ஐஸ்வர்யா ராய்

20 மே, 2017 - 12:42 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-At-Cannes-film-festival

உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான விழாக்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழாவும் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்களும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் படங்களும், இந்தியக் கலைஞர்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.


15 வருடங்களுக்கு முன்பு 2002ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் 'தேவதாஸ்' படத்தின் பிரிமீயர் காட்சிக்காக முதல் முறையாக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ரெட் கார்ப்பெட் நடைக்காக மீடியாக்களின் புகைப்படக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு எந்த ஒரு இந்திய நடிகைக்கும் கிடைக்காத புகழ் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த விழாவில் கிடைத்து வருகிறது. அவர் எந்த ஆடையில் வருவார், எந்த ஹேர்ஸ்டைலில் வருவார் என இந்திய நடிகைகளும் பொறாமைப்படும் அளவிற்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.


திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்னரும் ஐஸ்வர்யாவுக்கு அங்கு கிடைத்து வரும் வரவேற்பு பலருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. இந்த 43 வயதிலும் சிறிதும் அழகு குறையாமல் அவர் இந்த ஆண்டிலும் 'ரெட் கார்ப்பெட்,'டில் அசத்தல் நடை போட்டதைப் பார்த்து வியந்தவர்கள் அதிகம். இந்தாண்டு அவர் சிண்ட்ரலா உடையில் வந்து பார்வையாளர்களை அசத்தினார்.


Advertisement
வாழ்க்கை படம் : பிரதமரை சந்தித்த சச்சின்வாழ்க்கை படம் : பிரதமரை சந்தித்த ... கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்திய தீபிகா படுகோனே கேன்ஸ் திரைப்பட விழாவில் அசத்திய ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mr Chandramouli
    Tamil New Film Saamy 2
    • சாமி 2
    • நடிகர் : விக்ரம் ,
    • நடிகை : கீர்த்தி சுரேஷ்
    • இயக்குனர் :ஹரி
    Tamil New Film Karu
    • கரு
    • நடிகை : சாய் பல்லவி
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்
    Tamil New Film Pariyerum perumal

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in