ஏப்., 30 முதல் ஒலிக்க தயாராகும் கமலின் மையம் விசில் ஆப் | தமிழ் சினிமாவை இந்திய சினிமாவே திரும்பி பார்க்கிறது : விஷால் | உன்னி முகுந்தனுக்கு டிப்ஸ் கொடுத்த அனுஷ்கா | கடவுள் என்னை மன்னிக்கமாட்டார் : பிருத்விராஜ் | எர்ணாகுளம் சாலைகளில் இளைஞர்களை பதறவைத்த மம்முட்டி | விஜய் ஆண்டனியை மாற்றிய அண்ணாதுரை | கைகொடுக்கும் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் | தியா படத்துக்கு முன்னுரிமை ஏன்? | குழந்தைக்குரல் எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார் | பாடகியான சிவகுமாரின் மகள் |
கிரிக்கெட்டில் அசைக்க முடியாத ஒரு ஜாம்பவான சச்சின் டெண்டுல்கர். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட சச்சின், இப்போது சினிமாவில் களமிறங்கியுள்ளார். சச்சினின் வாழ்க்கை, 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்' என்ற பெயரில் சினிமாவாக உருவாகி உள்ளது. இதில் சச்சின் ரோலில் அவரே நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரைலர் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. வருகிற 26-ம் தேதி படம் ரிலீஸாக உள்ளது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை சச்சின் டெண்டுல்கர் இன்று(மே 19-ம் தேதி) சந்தித்து பேசினார். அப்போது தனது வாழ்க்கை படம் குறித்து பிரதமரிடம் எடுத்து கூறினார். பிரதமரும் சச்சின் படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்தார். இதற்கு சச்சின் தன் டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருக்கிறார். அதோடு, தான் பிரதமரை சந்தித்த போட்டோவையும் டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.