ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
குஜராத்தி மொழியில் வெளியான படம் 102 நாட் அவுட். இந்தப்படத்தை தழுவி பாலிவுட்டில் 102 நாட் அவுட் படம் உருவாகிறது. இதில் 102 வயது முதியவராக அமிதாப் நடிக்க, அவரது 75 வயது மகனாக ரிஷி கபூர் நடிக்க இருக்கிறார். 102 வயதான அப்பாவுக்கும், 75 வயதான மகனுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. உமேஷ் சுக்லா இயக்குகிறார்.
இப்படத்தில் அமிதாப்-ரிஷி கபூரின் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் அமிதாப் மிகவும் வயதானவராக தாடியுடன் தோன்ற, அவருக்கு அருகில் ரிஷி கபூர் அவரை விட சற்று குறைவான முதிர் தோற்றத்தில் இருக்கிறார். தற்போது இந்த ஸ்டில் வலைதளங்களில் டிரெண்ட்டாகி வருகின்றன. மும்பையில் 102 நாட் அவுட் பட ஷூட்டிங் ஆரம்பமாகி உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள் படத்தை ரிலீஸ் செய்ய எண்ணியுள்ளனர்.