இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரேகா கபூர் தயாரிப்பில், சாஷாங்கா கோஷ் இயக்கத்தில் கரீனா கபூர், சோனம் கபூர் மற்றும் ஸ்வரா பாஸ்கர் ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்க இருக்கும் படம் வீரே தி வெட்டிங். இப்படத்தின் ஷூட்டிங் கடந்த செப்டம்பர் மாதமே ஆரம்பமாக வேண்டியது. ஆனால் கரீனா கபூர் கர்ப்பமாக இருந்தது, குழந்தை பிறந்தது போன்ற காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது. முதலில் மார்ச்-ஏப்ரலில் ஆரம்பிக்கும் என்றார்கள், அதுவும் ஆரம்பமாகவில்லை. இதனால் படம் டிராப்பாகிவிட்டதாக பேச்சு எழுந்தது. ஆனால் இதை தயாரிப்பாளர் ரேகா கபூர் மறுத்துள்ளார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரேகா கபூரிடம் வீரே தி வெட்டிங் படம் பற்றி கேட்டபோது, அவர் கூறியதாவது... படம் கண்டிப்பாக வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. தொடர்ந்து 55 நாட்களில் படப்பிடிப்பை முடித்து வெளியிட எண்ணியுள்ளோம் என்றார்.