Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினியின் அரசியல் போர் பேச்சு...! - தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்.?

19 மே, 2017 - 15:13 IST
எழுத்தின் அளவு:
What-Politicians-says-about-Rajinis-Political-War-speech.?

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடம் பேசுகையில், அரசியல் தொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் போர் வரும் போது பார்த்து கொள்வோம், அது வரை பொறுமை காப்போம். நான் பச்சைத்தமிழன் என்று சஸ்பென்ஸ் வைத்து பேச்சை முடித்தார். ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:


தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் : ரஜினி என்னை சிறந்த நிர்வாகி என கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி தேர்தலுக்கு வருவதைத்தான் போர் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார். அவரது பாணியில் சொல்வதென்றால், அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி.


தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் : முதல் நாள் பேசும் போது வந்து விடுவார் என்ற தோற்றம் இருந்தது. இன்று ஒரு எதிர்பார்ப்புடன் முடிந்துள்ளது. ஆனால் அவர், சிஸ்டம், அடிப்படை நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்கிறார். இதனை சரி செய்ய, மோடியை அவர் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ஏன் புகழ்ந்தார் என்பது எனக்கு புரியவில்லை. நேரிடையாக போருக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்.


பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா : அவரது போர் என்ற மறைமுக பேச்சு தேர்தலுக்கு தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி துவங்கினாலும், எங்களுடன் இணைந்தாலும் வரவேற்கிறோம்.


இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : அரசியலில் எல்லாம் ஊழல் கலந்து விட்டது. தூய்மைாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவது வரவேற்கத்தக்கது. அரசியல் வருவது குறித்து அவர் வெளிப்படையாக அறிவிப்பாரானால் அதன் பின் எனது கருத்தை சொல்கிறேன்.


காங்., திருநாவுக்கரசர் : ரஜினி ஏறக்குறைய தான் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பின் முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம். ஜனநாயக நாட்டில் கட்சி துவங்க யாருக்கும் உரிமை உள்ளது. ரஜினி மக்கள் செல்வாக்கு பெற்றவர். அவர் மக்களிடம் நம்பிக்கை பெற்றவர். அனைவராலும் மதிக்ககூடியவர். அவர் அரசியலுக்கு வந்தால் எந்த தேசிய கட்சியிலும் சேர மாட்டார். அவர் தனியாவே கட்சி ஆரம்பிப்பார்.


பா.ம.க., அன்புமணி ராமதாஸ் : ரஜினி என் இனிய நண்பர், நல்ல நடிகர். அவர் நடிப்பை பார்ப்போம், ரசிப்போம். தமிழகத்திற்கு தற்போது தேவை நடிகர் அல்ல, நல்ல நிர்வாக திறமையுள்ள நபர் தான். ஆக்டர் வேண்டாம், டாக்டர் தான் வேண்டும். கடந்த காலத்தில் தமிழகத்தை நடிகர்களிடம் ஒப்படைத்து நாசப்படுத்திவிட்டனர். எம்.ஜி.ஆர்., நடிகர், ஜெயலலிதா நடிகை, நடிகர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தினர். நடிகர்கள் தமிழகத்தை ஆண்டது போதும், நாட்டில் வேறு எங்கும் 50 ஆண்டுகள் நடிகர்கள் ஆட்சி செய்தது இல்லை.


முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., : ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்று கொள்வதும், தீர்ப்பளிப்பதும் மக்கள் தான். அவரது அரசியல் பிரவேசம் காரணமாக அதிமுக என்னும் ஆலமரத்திற்கு பாதிப்பு வராது.


விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் : ரஜினி அரசியலுக்கு வந்தால் திருப்புமுனையாக அமையும். அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.


ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முனுசாமி : ரஜினி அரசியலுக்கு வரட்டும், வந்தால் தான் களத்தில் இருக்கும் பிரச்னைகள் தெரியும்.


ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மா.பாண்டிய ராஜன் : ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை.


நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் : ரஜினி தலைமை ஏற்று சேவை செய்யட்டும். ஆனால், முதல்வராகி, தலைமையேற்று தமிழ்மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் விட்டு விடலாம். அரசியலில் அளப்பரிய தியாகம் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் அவருக்கு சரிப்படாது.


ரசிகர்கள் கருத்து : ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்கள் நிருபர்களிடம் பேசுகையில், எங்கள் தலைவர் மக்களுக்கு நல்ல தீர்வு காண்பார். போர் என்று துவக்கியிருக்கிறார். அவர் முதல்வர் ஆகும் வரை போர் நடக்கும் என்றனர்.


Advertisement
'பாகுபலி 2'-வில் பாட மறுத்த பாலிவுட் பாட(கி)கர்'பாகுபலி 2'-வில் பாட மறுத்த ... தமிழகம் முழுக்க விவரங்களை திரட்டித் தாங்க...! - ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு தமிழகம் முழுக்க விவரங்களை திரட்டித் ...


வாசகர் கருத்து (11)

மணிமாறன் - chennai,இந்தியா
21 மே, 2017 - 10:08 Report Abuse
மணிமாறன் முட்டாப்பயல்...முட்டாள் ரசிகனுங்க
Rate this:
SaiBaba - Chennai,இந்தியா
20 மே, 2017 - 17:39 Report Abuse
SaiBaba தினமலர் போட்டிருக்கிற படத்தை பார்த்தாலே தெரியலையா, ரஜினி தான் முன்னால நிக்கிறார், மத்தவங்க எல்லாரும் அடுத்து தான் நிக்கிறாங்க.
Rate this:
pachchai tamilan - coimbatore,இந்தியா
20 மே, 2017 - 07:32 Report Abuse
pachchai tamilan இங்க கருத்து சொன்ன எல்லோரும் தமிழனை தமிழன்தான் ஆளவேண்டும் என்கிறார்கள் . அப்படின்னா , நீங்க ரஜினி வந்தா, முதலைமைச்சர் ஆயிடுவார்ன்னுதானே பயப்புடுறீங்க . போங்கடா , போய் வேலைய பாருங்க .
Rate this:
Suman - Mayiladuthurai ,இந்தியா
20 மே, 2017 - 02:17 Report Abuse
Suman ரஜினி வந்தாச்சு முதல் மந்திரியாவதை யாராலும் தடுக்கமுடியாது. நேர்மையாளர்கள் அனைவரும் வரவேற்கின்றனர். பெரும்பாலும் தப்பு செய்பவர்கள், அரசியல்வாதிகளை நம்பி மறைமுகமாக வியாபாரம் செய்பவர்கள் தமிழ் என்ற போர்வையில் எதிர்க்கிறார்கள் எவ்வளவு பேருக்கு போரிட தைரியம் ரஜினியுடன் என்று தேர்தல் வரும்போது பாப்போம்.
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
19 மே, 2017 - 23:19 Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ரஜினியின் அரசியல் "போர்" பேச்சு படு போர்.. என்று மக்கள் கருதுகிறார்கள்.
Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Tea Kadai Bench
  • டீ கடை பெஞ்ச்
  • நடிகர் : ராமகிருஷ்ணன்
  • நடிகை : தருஷி
  • இயக்குனர் :ராம் சேவா
  Tamil New Film Iravukku Aayiram Kangal
  Tamil New Film Seyaal Movie
  • செயல்
  • இயக்குனர் :ரவி அப்புலு

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in