Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார்: நண்பர் ராஜ்பகதூர் சொல்கிறார்.

19 மே, 2017 - 10:42 IST
எழுத்தின் அளவு:
Rajini-will-surely-enter-in-politics-says-raj-bahadur

ரஜினி தற்போது தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் போட்டோ எடுத்து வருகிறார். முதல் நாள் அவர்களிடையே பேசிய ரஜினி நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது. அப்படி வந்தால் இதய சுத்தியுடன் இருப்பேன். பணம் சம்பாதிக்க நினைக்கிறவங்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்றார். இந்த நிலையில் ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர், ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார். ரஜினி பெங்களூருவில் பஸ் கண்டக்டராக இருந்தபோது டிரைவராக பணியாற்றியவர் ராஜ்பகதூர். அவர் மேலும் கூறியிருப்பதாவது:


ரஜினி அவரது உறவினர் திருமணத்திற்காக கடந்த 8ம் தேதி பெங்களூர் வந்திருந்தார். அப்போது அருடன் நிறைய பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தமிழ்நாட்டில் அரசியல் சூழ்நிலை பற்றி நிறைய வருத்தப்பட்டார். முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு எல்லாமே மாறிவிட்டது. தமிழகத்தின் எதிர்காலம் கவலை அளிப்பதாக இருக்கிறது. ஏழை மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும். என்று கூறினார்.


நான் வேண்டுமானல் அரசியலில் இறங்கட்டுமா உன் கருத்து என்ன என்று கேட்டார். என் கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகத்தின் கருத்தே நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதுதான் என்று அவரிடம் சொன்னேன். ரஜினி ஒரு தீர்க்கான முடிவோடு இருக்கிறார் என்பதை புரிந்து கொண்டேன். அவரது ரசிகர்கள் எல்லா கட்சியிலும் இருப்பதால் அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார். தனிக்கட்சிதான் தொடங்குவார். என்கிறார் ராஜ்பகதூர்.


Advertisement
ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு: பிரதமருக்கு விஷால் கடிதம்ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு: ... இத்தனை படங்களில் நடிப்பேன் என்று நினைக்கவில்லை - ஸ்ரீதிவ்யா இத்தனை படங்களில் நடிப்பேன் என்று ...


வாசகர் கருத்து (4)

g senthil - mdu  ( Posted via: Dinamalar Windows App )
20 மே, 2017 - 06:54 Report Abuse
g senthil வாப்பா நீயும் வந்து செஞ்சுட்டு போ
Rate this:
அபிமன்யு - chennai,இந்தியா
19 மே, 2017 - 16:02 Report Abuse
அபிமன்யு அவர் அரசியலுக்கு வருவார்.. வருவார் என்று அவரைத்தவிர மற்ற எல்லோரும் சொல்கிறார்களே.. அதுதான் காமெடி
Rate this:
19 மே, 2017 - 15:59 Report Abuse
எப்போதும் வென்றான் அப்போ இவர் தான் துணை முதல்வர்
Rate this:
19 மே, 2017 - 12:03 Report Abuse
KrishnaMurthy அரசியல் வந்து நாசமா போவார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா
    Tamil New Film Mersal
    • மெர்சல்
    • நடிகர் : விஜய்
    • நடிகை : காஜல் அகர்வால்
    • இயக்குனர் :அட்லீ

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in