Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

டாஸ்மாக்கிற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை - ஜீவா

19 மே, 2017 - 01:37 IST
எழுத்தின் அளவு:
There-is-no-link-between-me-and-Tasmac-says-Jeeva

கட்டாய வெற்றியை எதிர்பார்த்து காத்திருக்கும் ஜீவாவின் அடுத்த படம், சங்கிலி புங்கிலி கதவ தொற. இயக்குனர் அட்லி தயாரிப்பில், எம்.ஆர்.ராதா பேரனும், கமல் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவருமான, ஐக் இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படம் பற்றியும், தன்னை பற்றியும், மனம் திறந்து பேசுகிறார் ஜீவா.


* அதென்ன சங்கிலி புங்கிலி என, ஒரு தலைப்பு?


இந்த படம், திகில் கலந்த காமெடி கதையை மையமாக வைத்து தயாராகி உள்ளது. ஒரு வீட்டில் பேய் இருக்கும். அந்த பேயைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் தான், கதை. ஸ்ரீதிவ்யா, ராதாரவி, ராதிகா, சூரி என, ஒரு நட்சத்திர பட்டாளமே படத்தில் இருக்கு.


* நீங்க, விஷால் அணியைச் சேர்ந்தவர்; ஆனால், எதிர் அணியைச் சேர்ந்த ராதாரவி, ராதிகாவுடன் இந்த படத்தில் சேர்ந்து நடித்தது எப்படி?


சரத்குமார், ராதிகா, ராதாரவி போன்றவர்கள் எல்லாம், என் அப்பாவின் நண்பர்கள். சரத் சார், எங்கள் தயாரிப்பில், பல படங்களில் நடித்திருக்கிறார். அதனால், எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நடிகர் சங்க தேர்தல் அன்று, ஓட்டுப் போட்டு விட்டு வரும் போது, என்ன ஜீவா, உன்னோடு நடிக்க தேதி கொடுத்திருக்கிறேன் என, அவரே வந்து பேசினார். எல்லா துறையிலும் ஒரு மாற்றம் வருவது நல்லது தானே; நாளைக்கு, விஷால் மாதிரி வேறு ஒருவர், நல்ல திட்டங்களுடன் வந்தால், அவரை ஆதரிப்போம். நடிகர்களுக்குள் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.


* படத்தின் இயக்குனர் கமல் உதவியாளர் என்பதால் ஸ்பெஷல் ஏதும் இருக்கா.?


நீங்க முத்த காட்சி பற்றி ஏதும் கேட்கவில்லையே. அதெல்லாம் படத்தில் இயக்குனர் வைக்கவில்லை. மற்றபடி இந்த மாதிரி கதை களத்தில் நான் நடிப்பது முதல் முறை. பல நுணுக்கமான விஷயங்கள் படத்தில் இருக்கும். ஒளிப்பதிவு, இசை... என்று எல்லாமே பார்த்து பார்த்து செய்திருக்கார் இயக்குநர் ஐக். கமல் பிரியதர்ஷன் ரெண்டு பேர் அனுபவமும் இவரிடம் இருக்கு, படம் நன்றாக வந்துள்ளது.


* 2003 முதல் 2017 வரை சினிமாவில் தெரிந்த தெரிந்து கொள்ள விரும்பும் விஷயங்கள் உண்டா.?


எல்லாமே ஒரு கற்றல் தான், அப்பா தயாரிப்பாளர் என்பதால் படத்திற்கான திட்டமிடல் செலவு போன் பல விஷயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. அடுத்து, அறிவியல் வளர்ச்சியில் குறிப்பாக கம்ப்யூட்டர் யுகத்தில் இருக்கோம், நாளுக்கு நாள் பெரிதாகி கொண்டே போகுது. இதை பற்றிய நுணுக்கங்களை ஒவ்வொரு நடிகரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்போது ஒரு பெரிய கதவு திறந்து இருக்கு, அடுத்தடுத்து போய் கொண்டே இருக்கணும்.


* சினிமா துறை இப்போது எப்படி இருக்கிறது.?


சினிமாவில் பிளஸ் அண்ட் மைனஸ் இரண்டுமே இருக்கிறது. ஒரு சில படங்கள் தான் வெற்றி பெறுகிறது. நிறைய புதியவர்களை கொண்டு வந்து ஆதரவு தரணும். பிலிம் சிட்டி உருவாக்கி இங்கேயே படப்பிடிப்புகள் நடத்த அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.


* செட்ல டார்ச்சர் பண்றது யார்.?


என்னை யாரும் டார்ச்சர் பண்ணமாட்டாங்க. நான் தான் செட்டுல எல்லோரையும் உண்டு இல்லை என்று பண்ணிவிடுவேன். நான் கொஞ்சம் ஜாலி டைப், அடிக்கடி காமெடி பண்ணுவேன், எல்லோரையும் இந்த படத்தில் ரொம்பவே கலாய்த்திருக்கிறேன்.


* வெற்றி - தோல்வியை எப்படி எடுத்துக்குறீங்க?


நம்மை நம்பி, காசு போட்ட தயாரிப்பாளர்களுக்கு, கட்டாயம் லாபம் சம்பாதித்து கொடுக்க வேண்டும். படம் தோல்வி அடைந்தால், அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இவ்வளவு நாள் உழைப்பு, வீணாகி விட்டதே என, வருத்தம் இருக்கும். ஆனால், அதையும் ஒரு படிப்பினையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


* எந்த நடிகருடன் சேர்ந்து நடிக்க ஆசை?


எல்லாருமே இப்போது,பிசியான நடிகர்களாக இருக்கிறோம். அவர்களுக்கு தொல்லை தர விரும்பவில்லை. அவர்களது மார்க்கெட்டை கெடுக்க விரும்பவில்லை. ஆனால், சரியான கதையும், அதற்கு ஏற்ற தயாரிப்பாளர்களும் கிடைத்தால், யார் கூட வேண்டுமானாலும் நடிக்க தயார்.


* மச்சி, ஒரு குவாட்டர் சொல்லு என, நீங்கள் கூறிய டயலாக், இன்னும் பேசப்படுகிறதே?


அது, உண்மை தாங்க. என்னை, டாஸ்மாக் பிராண்ட் அம்பாசிடரா நினைச்சிட்டாங்க போலிருக்கிறது. அந்த டயலாக்கை பேசும் போது, இந்த அளவுக்கு பிரபலமாகும் என தெரியாது. சமீபத்தில், ஒரு ஏரியாவில், டாஸ்மாக் கடை மூடியதற்கு, ஒருவர் என்னிடம் வந்து வருத்தப்பட்டார். எனக்கும், இந்த விஷயத்துக்கும் சம்பந்தம் இல்லை என, அவரிடம் சொல்லி அனுப்பிவிட்டேன். குடும்பத்துடன் கோவிலுக்கு போனாலும், ரசிகர்கள் சிலர், இந்த டயலாக்கை சொல்லி குரல் எழுப்புகின்றனர். இதை எல்லாம் விட கொடுமையான விஷயம் என்ன தெரியுமா; என் பையனுக்கு, ஆறு வயது ஆகிறது. எல்லாரும் இதைப்பற்றி பேசுவதை கவனித்த அவன், டாடி, வாட் இஸ் குவாட்டர் என, கேட்கிறான். எனக்கு ரொம்ப கஷ்டமாக போய்விட்டது.


Advertisement
ஸ்கெட்ச் போடும் விக்ரம்!ஸ்கெட்ச் போடும் விக்ரம்! போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : அரசியல் பிரவேசத்திற்கு தயாராகிறார் ரஜினி போர் வரும் போது பார்த்துக் கொள்வோம் : ...


வாசகர் கருத்து (1)

என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
19 மே, 2017 - 04:31 Report Abuse
என்னுயிர்தமிழகமே இங்கிலீஷு? , கொல்டி கொல்டி கூட தான் சேருவான்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in