இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் விவேகம் படத்தின் கடைசிகட்ட படப்பிடிப்பை மே 10ஆம் தேதியோடு முடித்துவிட்டு அண்மையில் சென்னை திரும்பியது விவேகம் படக்குழு. ஆனால் பல்கேரியாவில் படமாக்கப்பட வேண்டிய சில காட்சிகளை அங்கே படமாக்காமலே வந்துவிட்டனர். எனவே அந்த காட்சிகளை சென்னையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்தக்காட்சிகளை எடுத்த பிறகே விவேகம் படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவுக்கு வரும். அதன் பிறகே படத்தின் போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தொடங்கும். இதற்கிடையில் விவேகம் படத்தின் பிசினஸை தொடங்கியுள்ளனர். சொன்ன பட்ஜெட்டைவிட அதிகமாக செலவை இழுத்துவிட்டாராம் இயக்குநர் சிவா.
இதனால் என்ன விலைக்கு பிசினஸ் பண்ணுவது என்று தெரியாமல் குழம்பிப்போயுள்ளது தயாரிப்பு தரப்பு. சில கோடி லாபம் வைத்து மொத்தமாக ஜாஸ் சினிமாஸ் நிறுவனத்திடம் படத்தை விற்றுவிட தீர்மானித்திருந்தனர். ஆனால் 5 கோடி பட்ஜெட்டுக்கு மேல் தயாரிக்கப்பட்ட படங்களின் ஒட்டுமொத்தமாக தமிழக உரிமையை விற்கக் கூடாது, ஏரயாக்களைத் தனித்தனியாக பிரித்துத்தான் விநியோக உரிமையை விற்க வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதனால், விவேகம் படத்தின் விநியோக உரிமையை மொத்தமாக விற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.