Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரஜினிக்கு தலையில் ஒன்றுமில்லை : வெளுத்து வாங்கிய மார்க்கண்டேய கட்ஜூ

18 மே, 2017 - 16:03 IST
எழுத்தின் அளவு:
Markandey-katju-slams-Rajini-regarding-politics-comment

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருவாரா... மாட்டாரா.... என்று கேள்வி தான் தமிழ்நாடு முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 8 ஆண்டுகளுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, முதல்நாள் சந்திப்பின் போது அரசியல் பற்றிய தனது கருத்தினை முன் வைத்தார். வழக்கம் போல் தான் அரசியலில் களமிறங்குவேன் என்று நேரடியாக சொல்லவில்லை.


இந்நிலையில் ரஜினியின் அரசியல் பேச்சை வைத்து பா.ஜ., காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் ரஜினியை தங்களது கட்சிக்கு வர வேண்டும் என்று அழைத்து வருகின்றனர். இதுதொடர்பாக வலைதளங்களில் ஒரு பெரிய விவாதமே போய் கொண்டு இருக்கிறது. பலரும் அவர் வருவதை வரவேற்றும், பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் வெளுத்து வாங்கியுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது... தென்னிந்திய மக்கள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருக்கிறேன். ஆனால் சினிமாக்காரர்களை இப்படி அவர்கள் கொண்டாடுவது முட்டாள்தனமாக இருக்கிறது. நான், சென்னை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருந்தபோது சில தமிழ் நண்பர்களுடன் சேர்ந்து சிவாஜி நடித்த படம் ஒன்றை தியேட்டரில் பார்க்க சென்றேன். அப்போது அவர் திரையில் தோன்றிய போது ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு இன்றும் என் நினைவில் இருக்கிறது. அதேப்போன்று இப்போது தென்னிந்தியர்கள் ரஜினி மீது பைத்தியமாக உள்ளார்கள். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.


ரஜினி அரசியலுக்கு வர அவரிடம் என்ன இருக்கிறது. நாட்டின் மிகப்பெரிய பிரச்னைகளாக இருக்கும் வறுமை, வேலையின்மை, ஊட்டச்சத்துகுறைபாடு, சுகாதார பிரச்னை, விவசாயிகளின் துயரங்கள் போன்றவற்றை தீர்ப்பதற்கு அவரிடம் ஏதாவது விஷயங்கள் உள்ளதா...? ஒரு விஷயமும் அவரிடம் இல்லை. பின்னர் எதற்காக ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். அமிதாப்பச்சனை போன்று ரஜினிக்கும் தலையில் ஒன்றும் இல்லை.


இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.


Advertisement
'கண்டாங்கி..' - 3 வருடப் பாடல் நேற்று டிரென்டிங்கில்...!'கண்டாங்கி..' - 3 வருடப் பாடல் நேற்று ... கலாபவன் மணி மரணம் : சிபிஐ.,க்கு மாற்றம் கலாபவன் மணி மரணம் : சிபிஐ.,க்கு ...


வாசகர் கருத்து (99)

srinivasan ranganathan - chennai,இந்தியா
24 மே, 2017 - 19:14 Report Abuse
srinivasan ranganathan தமிழ் நாட்டிலும் சரி இந்தியாவிலும் சரி இது வரை எந்த அரசியல்வாதிகளுக்கு தலையில் இருந்ததது , இந்திராகாந்தி மொரார்ஜி தேசாய் வாஜ்பாய் மற்றும் மோடி இவர்களைத்தவிர அதுவும் தமிழ் நாட்டில் யாருக்கும் தீர்க்கதரிசனம் இல்லை ஏதோ கொஞ்சம் எம்ஜியார் , மு க ஜே இவர்களெல்லாம் இலவசத்திலேயே காலத்தை ஒட்டியவர்கள் , இவர்கள் அறிவாளிகளையும் பக்கத்தில் வைத்துக்கொள்ள மாட்டார்கள் . ஆனால் ரஜினி அவர்களுக்கும் நல்ல உள்ளம் இருக்கிறது ஊழல் அரசியல் தெரியாது நல்ல பல அறிவாளிகளை பக்கத்தில் வைத்துக்கொள்ளவார். தமிழகத்தில் த்ரவிட காட்சிகள் அட்டகாசம் ஒழிய ரஜினி தான் உறுதியான போட்டியாளர். அவரிடம் உள்ள தயக்கம் தாமதமாகலாம் , ஆனால் வரும் தேர்தலில் நிச்சயம் ஒரு மாற்றம் வரும் . மே GOD BLESS ரஜினி
Rate this:
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
20 மே, 2017 - 15:30 Report Abuse
தமிழர்நீதி இவளவு சொல்லியும் தமிழ்ர்கள் கேட்காமல் விசிலடித்தால் , MGR , ஜெயா காலத்து அழிவு தமிழகத்தில் வருவதை தவிர்க்கமுடியாது .
Rate this:
Swaminathan - Chennai,இந்தியா
19 மே, 2017 - 18:07 Report Abuse
Swaminathan அரசியல் என்று ரஜினி பேச ஆரம்பித்தாலே ஏன் எல்லோரும் சிலிர்க்கிறார்கள்? அப்படியென்றால் அது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்றுதானே அர்த்தம்? நீதிபதியாக இருந்து இன்னொருவர் என்ன சொல்ல வருகிறார் என அறியாமலேயே தலையில் ஒன்றும் இல்லை என கூறுவது ஆணவத்தை காட்டுகிறது. நீதிபதியாக இருந்துவிட்டால் மண்டையில் எல்லாம் இருக்கிறது என அர்த்தமா? ரஜினி தன மீது எழும் விமரிசங்களை அணுகும் விதமே ரசிக்க வைக்கிறது. காலம் பதில் சொல்லும்.
Rate this:
krishna - cbe,இந்தியா
19 மே, 2017 - 14:18 Report Abuse
krishna ரஜினிக்கு அரசியல் சரிப்படாது. அரசியலில் நுழைந்து அடி வாங்க போகிறார்.
Rate this:
Gowrisankarm - Chennai,இந்தியா
19 மே, 2017 - 10:45 Report Abuse
Gowrisankarm கட்ஜு சொன்னது மிக சரியே.
Rate this:
மேலும் 94 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in