‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
பிரபல சர்ச்சை பெண் சாமியார் ராதே மா. லிப்ஸ்டிக், டீசர்ட்-அரை டவுசர், ஜிகு ஜிகு ஆடை... என தன்னை வித்தியாசப்படுத்தி கொண்டு சாமியார் என்று சொல்லிக்கொண்டு வருகிறார். இவர் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் உள்ளன. வரதட்சணை தொடர்பாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை எல்லாம் நடந்தது. இந்நிலையில் ராதே நடிகையாகிவிட்டார்.
இணையதளம் தொடர்பான தொடரில் அவர் நடிக்கிறார். இந்த தொடருக்கு நோ கேஸ்ட்டிங் நோ கோச் ஒன்லி அவுச் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இதில் பெண் சாமியாராகவே நடிக்கிறார் ராதே மா. சமீபத்தில் இதன் படப்பிடிப்புகள் அவரது பங்களாவில் ஆரம்பமானது. கேமரா முன்பு அவர் எந்த தயக்கமும் இன்றி சர்வசாதாரணமாக நடிக்கிறாராம் ராதே மா.