மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
விஜய், காஜல் அகர்வால், மோகன்லால் மற்றும் பலர் நடிக்க டி. இமான் இசையமைப்பில் ஆர்.டி.நேசன் இயக்கத்தில் மூன்று வருடங்களுக்கு முன்பு, 2014-ல் ஜனவரி 9ம் தேதி வெளிவந்த படம் 'ஜில்லா'. விஜய் நடித்த 'தமிழன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான டி. இமான், அதன் பின் 12 வருடங்கள் கழித்துதான் விஜய் படத்திற்கு மீண்டும் இசையமைத்தார். 'ஜில்லா' படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களுமே சூப்பர் ஹிட்டான பாடல்கள்.
வைரமுத்து எழுதிய 'கண்டாங்கி..கண்டாங்கி..' டூயட் பாடலை விஜய், ஸ்ரேயா கோஷல் பாடியிருந்தனர். இந்தப் பாடல் இன்றும் ரேடியோக்களிலும், டிவிக்களிலும் அதிகமாக ஒலி, ஒளிபரப்பாகி வருகிறது. டி டியூபில் இந்தப் பாடல் 70 லட்சம் பார்வைகளை சமீபத்தில் கடந்தது. அதைக் கொண்டாடும் விதத்தில் இந்தப் பாடலை நேற்று டிவிட்டர் டிரென்டிங்கில் விட்டனர் விஜய் ரசிகர்கள்.
'விவேகம்' டீசர் வெளிவந்த போது விஜய் ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்க இந்த 'கண்டாங்கி..' பாடலும் அவர்கள் பார்வையில் பட்டது. எனவே, இதைக் கூட நேற்று டிரென்டிங்கில் கொண்டு வந்துவிட்டார்கள். 'ஜில்லா' படத்தில் இடம் பெற்றுள்ள மற்ற பாடல்களான 'ஜிங்குனமணி..' பாடல் டி டியூபில் 81 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில் இப்போது 'கண்டாங்கி' பாடல் 70 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது. அடுத்து, “எப்ப..மாமா..மாமா..டிரீட்டு', பாடல் 50 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
ஜுன் 22ம் தேதி வர இருக்கும் விஜய்யின் பிறந்த நாளையும் இப்போதே டிவிட்டரில் பல டிரென்டிங் மூலம் கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் விஜய் ரசிகர்கள்.