Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குடும்பத்தை கவனியுங்கள், கெட்ட பழக்கத்தை விடுங்கள் - ரஜினி பேட்டி

18 மே, 2017 - 11:53 IST
எழுத்தின் அளவு:

தமிழ்நாட்டின் இன்றைய ஹாட் டாப்பிக்காக இருப்பவர் ரஜினிகாந்த் தான். 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து வரும் ரஜினி, முதல்நாள் சந்திப்பின் போது பேசிய அரசியல் தொடர்பான பரபரப்பு பேச்சு இன்னும் ஓய்ந்தபாடில்லை. "நான் என்ன ஆக வேண்டும் என்பது, இறைவன் கையில் உள்ளது. ஒரு வேளை அரசியலுக்கு வரும் சூழல் உருவானால், பணம் சம்பாதிக்க நினைப்போரை என் அருகே கூட சேர்க்க மாட்டேன்" என்றார். ரஜினியின் இந்த பேச்சு மீண்டும் அவரை அரசியலுக்குள் இழுத்து வந்துள்ளது. டிவி., சமூக வலைதளங்கள் என இதுதொடர்பான விவாதங்கள் போய் கொண்டு இருக்கின்றன.


இந்நிலையில் தொடர்ந்து 4வது நாளாக ரசிகர்களை இன்று(மே 18-ம் தேதி) சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்தார் ரஜினி. சரியாக காலை 9.20 மணிக்கு ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இன்று பாண்டிசேரி, கடலூர், தஞ்சாவூரை சேர்ந்த ரசிகர்கள் கலந்து கொண்டனர். இன்று ரஜினியை சந்திக்க வந்த ரசிகர்கள் பலர், தாங்கள் கொண்டு வந்த செயின், ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, மோதிரம் போன்றவற்றை ரஜினி கையால் அணிவிக்க சொன்னார்கள், ரஜினியும் அதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் அணிவித்தார். கடலூரைச் சேர்ந்த சி.டி முத்து என்பவர் தான் கைலாஷ் சென்று வந்த போது வாங்கி வந்த ருத்ராட்ச மாலையை ரஜினிக்கு பரிசாக வழங்கினார். நாளையுடன் ரசிகர்கள் சந்திப்பு முடிவடைகிறது.


ரசிகர்கள் சந்திப்பை முடித்து விட்டு வீடு திரும்பிய ரஜினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ரஜினி, "ரசிகர்களுக்கு வயதாகிவிட்டாலும் ரசிகர்களிடம் முன்பு இருந்த அதே ஆர்வம் இன்றும் குறையாமல் இருப்பது மகிழ்ச்சி. இந்த சந்திப்பை என்னால் மறக்க முடியாது. ரசிகர்கள் உடனான அடுத்த சந்திப்பு குறித்த தேதி விரைவில் அறிவிக்கப்படும். ரசிகர்கள் தங்கள் குடும்பத்தை நன்றாக பார்த்து கொள்ளுங்கள், கெட்ட பழக்கத்தை விட்டு விடுங்கள் என்றார். தொடர்ந்து அவரிடத்தில் அரசியல் தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அரசியல் தொடர்பான கேள்வி வேண்டாம் என்று கூறிவிட்டார்.


Advertisement
ரஜினியின் புதிய ஹீரோயின்: யார் இந்த ஹூமா குரேஷி?ரஜினியின் புதிய ஹீரோயின்: யார் இந்த ... இரண்டு படங்களில் அறிமுகமாகும் ராஷி கண்ணா இரண்டு படங்களில் அறிமுகமாகும் ராஷி ...


வாசகர் கருத்து (37)

prem - dammam,சவுதி அரேபியா
19 மே, 2017 - 21:59 Report Abuse
prem இவன் ஒரு டுபாக்கூர்
Rate this:
நன்னெறி - TOKYO,ஜப்பான்
18 மே, 2017 - 22:44 Report Abuse
நன்னெறி இந்தி நடிகர் விவேக்ஓபராய் கடந்த சுனாமியின் போது நூற்றுகணக்காண வீடுகளை இலவசமாக பாதிக்கப்பட்ட கடலூர் மக்களுக்கு நல்லெண்ணத்துடன் தந்தார். தற்போது எல்லை பாதுகாப்பில் இறந்த வீரர்களுக்கும் வீடுகள கட்டி தரவுள்ளார் அவர்மனிதநடிகர். நடிகர் கமல்கூட ரசிகர்மன்றம் மூலம் இரத்ததானத்தை சேவையை வழங்கிவந்தார். இவரோ தன்ரசிகபட்டாளத்தை கள்ளாகட்டுவதில் எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பதிலேயே குறி.இவரின் ரசிகர் லாரன்ஸ்கூட ஜல்லிக்கட்டிற்கு களத்திலிருந்து இறுதிவரை ஆதரவுதந்தார். இந்த அரிதாரம்பூசி ஒரு போதும் அவ்வாறு நடக்கவாய்ப்பில்லை. கடந்த 30 வருடங்களில் அப்படி என்னதான் மக்களுக்காக செய்துவிட்டார், மற்றபடி சங்கர் முதல்வன்2 எடுத்தால் ரஜினி நடித்துக்கொள்ளலாம். ஒரு நடிகராக அவருடைய உரிமையே மற்றபடி நிஜமுதல்வராக வேண்டுமெனில் ஒரு ஐந்து வருடம் பொதுமக்களின் தேவைகளுக்கு போராடுங்கள் பார்ப்போம். கொடிகாத்தவர்களும், செக்கிழுத்த செமமல்களும், வைக்கம்வீரர், கர்மவீரர், பரிசுத்தமான தோழர் ஜீவாவும் என தலைசிறந்தோரின் படடியல் நீளும் தன்தகுதியை இவர்களுடன் ஒப்பிட்டு பிறகு யோசிக்கவும்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
18 மே, 2017 - 16:54 Report Abuse
Raman Ganesan ராம் மூர்த்தி உங்க MGR ஆட்சிலதான் 1981ல கள்ளுக்கடை 8 NO சாராயக்கடை திறக்கப்பட்டது. நன்னெறி நீ ஜப்பான்ல சம்பாதிச்ச பணத்துக்கு உண்மையா வரி கட்டு. நான் சிகுரெட், தண்ணி அடிச்சதில என்ன மாதிரி கோடிக்கணக்கான பேரு தமிழ்நாட்டுல இருகாங்க நல்லவன் கண்ணுக்கு எல்லாம் நல்லதா தெரியும்.
Rate this:
Raman Ganesan - Madurai,இந்தியா
18 மே, 2017 - 16:47 Report Abuse
Raman Ganesan ஹலோ ஜார்ஜ் விசில் அடிச்சான் குஞ்சு ஹொவ் ஆர் யு
Rate this:
18 மே, 2017 - 16:32 Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் மறைந்து மறைந்து சிகரெட், மது குடித்துக்கொண்டிருந்தவர்களை வெளிப்படையாக வெட்கமில்லாமல் குடிப்பதற்கு ஒரு ஊன்று சக்தியே இந்த நடிகர் தானே. இப்போதும் மேடையில் என்னமாய் நடிக்கிறார். இவரின் பழைய படங்களை பார்த்த எங்களுக்கு தானே தெரியும் இந்தாலின் லட்சணங்கள். பிற்பாதியில் அனைத்தையும் துறந்த முனிவர்போல தன்னை உருவாக்கப்படுத்திக்கொண்டார். எந்த கணக்கும் கேட்காமல் ஆயிரமாயிரம் கோடிகளை வாரி கொடுத்திருக்கிறார் பல சினிமாவில், ஆனால் அது மக்களுக்கு வந்து சேரவில்லை, என்ன செய்வது.
Rate this:
மேலும் 32 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Julie 2
  • ஜூலி 2
  • நடிகை : லட்சுமி ராய்
  • இயக்குனர் :தீபக் ஷிவ்தாசினி
  Tamil New Film Velaikkaran
  • வேலைக்காரன்
  • நடிகர் : சிவகார்த்திகேயன்
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :ஜெயம் ராஜா
  Tamil New Film Annadurai
  • அண்ணாதுரை
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : டயானா சம்பிகா
  • இயக்குனர் :ஸ்ரீனிவாசன்.ஜி
  Tamil New Film Dhuruva natchathiram

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in