பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் |
ரஜினி 2.ஓ படத்தில் நடித்து முடித்து விட்டார். அடுத்து அவர் கபாலி படத்தை இயக்கிய பா.ரஞ்சித் படத்தில் நடிக்க இருக்கிறார். இதனை தனுஷ் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் ரஜினியின் ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்க இருக்கிறார். அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், வெளியான தகவல்களை படக்குழு மறுக்கவில்லை. இதனால் ஹூமா குரேஷி நடிப்பது உறுதியாகியிருக்கிறது. யார் இந்த ஹூமா குரேஷி?, அவரைப்பற்றிய ஒரு பார்வை...
டில்லியை சேர்ந்த ஹூமா குரேஷி, டில்லி பல்கலைகழகத்தில் வரலாறு படித்து விட்டு பத்திரிகையாளராக பணியாற்றினார். அதன் பிறகு விளம்பர மாடலாக இருந்தார். இவர் நடித்த ஒரு செல்போன் விளம்பரத்தை பார்த்துவிட்டு அனுராக் காஷ்யாப், தான் இயக்கிய கேங்ஸ்ஸ் ஆப் வசிபூர் படத்தில் நடிக்க வைத்தார். அதன் இரண்டாம் பாகத்திலும் அவரே நடித்தார். இரண்டிலுமே நடிப்பில் பிச்சு உதறினார். இதில் நடிததற்காக தேசிய விருது தவிர மற்ற அனைத்து தனியார் அமைப்புகளின் விருதுகளை வாங்கி குவித்தார். அதன்பிறகு ஷார்டஸ், டிடே, ஏக் தய் தயான், தே இஷிக்கியா, பதல்பூர் ஆகிய படங்களுக்காக விருதுகளை பெற்றார்.
ஹூமாவும், ராதிகா ஆப்தே போன்று தனித்திறமையான நடிகை. ஆனால் கமர்ஷியல் ஹீரோயின் கிடையாது. கொடுக்கிற கேரக்டர்களை அப்படியே உள்வாங்கி நடிக்ககூடியவர். கேரக்டருக்காக எதையும் செய்கிறவர். ஹூமா பல படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். மியூசிக் ஆல்பங்களில் ஆடியிருக்கிறார். குறும்படங்களில் நடித்திருக்கிறார்.
ஹூமா சினிமாவுக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் பத்து படங்களுக்குள் தான் நடித்திருக்கிறார். நடித்த படங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் கவனம் ஈர்த்த படங்கள். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். ரஜினியின் அடுத்த படம் மும்பை தாராவி பகுதியை கதை களமாக கொண்டது. இதில் ஹூமா குரேஷி, மும்பை பெண்ணாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் வருகிற 28ந் தேதி முதல் தொடங்குகிறது.