'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஏ.எல்.விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் தமிழுக்கு வந்தவர் லண்டன் நடிகை எமிஜாக்சன். முதல் படமே ஹிட்டாக அமைந்ததால் அதன்பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி என பரவலாக நடித்து வருகிறார். குறிப்பாக, பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கிய ஐ படத்தில் நடித்த எமி, அவரது அடுத்த படமான 2.ஓ படத்திலும் தற்போது ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனால் ஷங்கர் படத்தில் அடுத்தடுத்து நடிக்கும் வாய்ப்பை பெற்றார் எமிஜாக்சன்.
மேலும், தற்போது 2.ஓ படத்தை அடுத்து ஒரு ஆங்கில படத்திலும் நடித்து வரும் எமிஜாக்சன், அதைத் தொடர்ந்து தி வில்லன் என்றொரு கன்னட படத்திலும் நடிக்கிறார். எமி ஜாக்சன் முதல்முறையாக நடிக்கும் இந்த கன்னட படத்தில், சிவராஜ்குமார், நான் ஈ சுதீப் ஆகியோர் நாயகர்களாக நடிக்கிறார்கள். பிரேம் இப்படத்தை இயக்குகிறார்.