ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் மற்றும் பலர் நடிக்கும் 'விவேகம்' படத்தின் டீசர் கடந்த வாரம் 11ம் தேதி 00.01 மணிக்கு வெளியிடப்பட்டது. வெளியான அடுத்த சில மணி நேரங்களிலேயே பல சாதனைகளை முறியடித்த டீசர் குறைந்த நேரத்தில் அதிக லைக்குகள், அதிக பார்வைகள் என்ற புதிய சாதனையைப் படைத்தது.
முக்காலிவாசி காட்சிகள் வெளிநாட்டில் மட்டுமே படமாகி வரும் இந்தப் படத்தின் டீசரிலும், வெளிநாட்டுக் காட்சிகள், அஜித் மட்டுமே இடம் பிடித்தாலும் தொடர்ந்து யு டியுப் டிரென்டிங்கில் நம்பர் 1 இடத்திலேயே இருந்தது. இப்போதுதான் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த ஒரு வாரத்திற்குள் 'விவேகம்' டீசரை 12 மில்லியன் பேர், அதாவது 1 கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 3 லட்சத்து 65 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
தமிழில் இதுவரை வெளிவந்த டீசர்களில் 'கபாலி' டீசர்தான் முதலிடத்தில் உள்ளது. அந்த டீசரை இதுவரை 3 கோடியே 38 லட்சம் பேர் பார்த்துள்ளனர். 4 லட்சத்து 64 ஆயிரம் பேர் இதுவரை லைக் செய்துள்ளனர். இந்த சாதனையை 'விவேகம்' டீசர் முறியடிக்குமா?.