தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'ஏ.ஆர்.முருகதாஸ் புரொடக்ஷன்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரிக்கும் படம் 'ரங்கூன்'. ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேலாக, நீண்டகால தயாரிப்பில் இருந்து வந்த இந்த படத்தில் கௌதம் கார்த்திக், சனா மக்பூல் ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்த ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தை ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு ஜூன் 23ஆம் தேதி வெளியிட 'ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்' திட்டமிட்டு தியேட்டர்களை புக் பண்ணும் வேலையில் இறங்கியது.
சிம்பு நடிக்கும் ஏஏஏ, ஜெயம் ரவியின் 'வனமகன்' ஆகிய படங்களும் ஜூன் 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. அதனால் ரங்கூன் படத்துக்கு எதிர்பார்த்த அளவுக்கு தியேட்டர்கள் கிடைக்குமா...? என்ற சூழல் நிலவுகிறது. கௌதம் கார்த்திக் நடித்து கடைசியாக வெளியான முத்துராமலிங்கம் படம் ஒரே நாளில் பல ஊர்களில் தூக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.