ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்கில் சமீபகாலமாக நயன்தாராவின் படம் ரிலீசாகவில்லை என்கிற குறையை போக்கும் விதமாக 'வாசுகி' என்கிற படம் ரிலீசாக இருக்கிறது. இது மலையாளத்தில் கடந்த வருடம் நயன்தாரா நடித்த 'புதிய நியமம்' படத்தின் தெலுங்கு டப்பிங் தான். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் மையக் கருத்துடன் இந்தப்படம் வெளியானது. இந்தப்படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்க ஏ.கே.சாஜன் என்பவர் இந்தப்படத்தை இயக்கியிருந்தார்.. இந்தப்படத்தின் தெலுங்கு 'வாசுகி'யின் டிரைலர் சமீபத்தில் வெளியானது..
டிரைலரை பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம் என்னவென்றால் முழுக்க முழுக்க நயன்தாராவை மட்டுமே போகஸ் செய்து இந்த டிரைலர் உருவாக்கப்பட்டுள்ளது. மருந்துக்கு கூட ஒரு காட்சியில் கூட மம்முட்டியின் முகம் தென்படாமல் டிரைலரை கட் பண்ணியிருக்கிறார்கள். தெலுங்கில் மோகன்லாலைப் போல மம்முட்டிக்கு அவ்வளவாக மார்க்கெட் இல்லை என்பதால் அவரை இருட்டடிப்பு செய்துவிட்டு நயன்தாராவை மட்டும் முன்னிலைப்படுத்தி உள்ளார்கள் என்றே தெரிகிறது.