Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

என் வாழ்க்கையில் ஹாப் பாய்பிரண்ட் இல்லை : ஸ்ரத்தா கபூர்

17 மே, 2017 - 12:53 IST
எழுத்தின் அளவு:
I-never-had-any-half-Boyfriend-in-my-life---Shraddha-Kapoor

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஸ்ரத்தா கபூர். மாஜி வில்லன் நடிகர் சக்தி கபூரின் மகளான இவர், தற்போது மோகித் சூரி இயக்கத்தில், அர்ஜூன் கபூருடன் ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸாக உள்ள ஹாப் கேர்ள்பிரண்ட் படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் அவர் அளித்த சிறப்பு பேட்டி...


* ஹாப் கேர்ள்பிரண்ட் படம் பற்றியும், உங்க கேரக்டர் பற்றியும் சொல்லுங்க.?


இது ஒரு ரொமான்ட்டிக் படம். பீகார் பையன் ஒருவர், டில்லியில் வசிக்கும் வசதியான பெண் ஒருவரை காதலிக்கிறார். நான் வசதியான மேல்தட்டு பெண்ணாக ரியா சோமனி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். முதன்முறையாக வசதிப்படைத்த மேல்தட்டு பெண்ணாக நடிக்கிறேன். இந்தரோலுக்காக இயக்குநர் மோகித் சூரி, மேல்தட்டில் உள்ள பெண்களை சந்திக்க சொன்னார். நான் சில பெண்களை சந்தித்து அவர்களின் நடை, உடை, ஸ்டைல், வாழ்க்கைதரம் உள்ளிட்ட பல விஷயங்களை கற்று கொண்டேன். அது படத்தில் நடிக்க உதவியது.


* மோகித் சூரியுடன் 3வது படம், அவரைப்பற்றி சொல்லுங்க.?


ஆமாம், மோகித்துடன் எனக்கு இது 3வது படம். இதற்கு முன்னர் ஆஷிக்-2 மற்றும் ஏக் வில்லன் படங்களில் நடித்தேன். இரண்டு படங்களும் வெற்றி பெற்றன. என் சினிமா பயணத்தில் மறக்க முடியாத கேரக்டராக தான் மோகித் எப்பவும் கொடுப்பார். என்னைப்பற்றி அவர் நன்கு புரிந்து வைத்துள்ளார், எனக்கு ஏற்ற கேரக்டரை தான் அவர் தருவார். ஒருவேளை இந்தப்படத்தில் என்னை நடிக்க வைக்கவில்லை என்றால் நிச்சயம் அவர் மீது கோபப்பட்டிருப்பேன்.


* ஹாப் கேர்ள்பிரண்ட் புத்தகத்தை படித்திருக்கிறீர்களா.?


சில நாட்கள் ஹாப் கேர்ள்பிரண்ட் புத்தகத்தை படித்தேன். ஆனால் இயக்குநர் மோகித், புத்தகத்தை படிக்க வேண்டாம், படத்தின் கதையை படி என்றார். நான் கதையை படித்தாலே போதும் அந்த கேரக்டர் உடன் ஒன்றிப்போய் விடுவேன் என்று இயக்குநர் மோகித்திற்கு தெரியும்.


* உங்கள் வாழ்க்கையில் ஹாப் பாய்பிரண்ட் யாரும் இருந்தார்களா.?


என் வாழ்க்கையில் அப்படி யாரும் இல்லை. ஆனால் நான் பள்ளியில் படிக்கும்போது ஒரு பையனை பிடிக்கும். அவன் மிகவும் அழகாகவும், அமைதியாகவும் இருப்பான். நான் யார் என்று சொல்லாமலே அவனுக்கு போன் செய்வேன், சிலநேரம் அவனது அம்மா போனை எடுப்பார், அப்போது எனக்கு கடும் கோபம் வரும். ஆனால் அமைதியாக இருந்துவிடுவேன். ஒருபோதும் என்னுடைய உணர்வுகளை அந்த பையனிடம் வெளிப்படுத்தியது கிடையாது.


* கடந்த இரண்டு படங்கள் தோல்வியை சந்தித்தன, தோல்வியை எப்படி எடுத்து கொள்வீர்கள்.?


ராக் ஆன்-2 மற்றும் ஓகே ஜானு படங்கள் தோல்வியை சந்தித்தது உண்மை தான். என்னை பொறுத்தமட்டில் வெற்றி, தோல்வி நம்முடைய கையில் இல்லை. நான் வெற்றியை தலையில் ஏற்றி கொள்ள மாட்டேன், அதேப்போன்று தோல்வியையும் மனதில் வைத்து கொள்ள மாட்டேன். ஒவ்வொரு படத்திலும் நான் எனது சிறந்த பங்களிப்பை கொடுத்து வருகிறேன். ஆனால் சில படங்கள் தோல்வி அடைகின்றன, அந்தசமயம் சிறிது வருத்தம் இருப்பது சகஜமான ஒன்று தான். ஆனால் அதையே எண்ணி வருத்தப்பட மாட்டேன், அடுத்தப்படத்தை இன்னும் சிறப்பாக கொடுக்க முயற்சிப்பேன்.


* அர்ஜூன் கபூருடன் நடித்த அனுபவம் பற்றி சொல்லுங்க.?


அர்ஜூன் உடன் பணியாற்றியது மகிழ்ச்சியான தருணம். அவர் இப்போது எனக்கு நல்ல நண்பராகிவிட்டார். அர்ஜூன் கலகலப்பானவர், அவர் செட்டில் இருந்தாலே கலகலப்பாக இருக்கும். நானும், அர்ஜூனும் முன்னரே படங்கள் பண்ண வேண்டியது, ஆனால் அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை, இப்போது தான் நாங்கள் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது.


இவ்வாறு ஸ்ரத்தா கபூர் கூறினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in