நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ |
திரிஷ்யம் மலையாள படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்த வெங்கடேஷ், இறுதிச்சுற்று தமிழ்ப்படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடித்தார். அதைத்தொடர்ந்து தற்போது கிஷோர் திருமலா இயக்கும் ஒரு படத்தில் நடிக்க தயாராகிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில், இதுவரை 90 படங்களுக்கு மேல் இயக்கியுள்ள பிரியதர்ஷனும் வெங்கடேசுக்கு ஒரு கதை சொல்லி அதன் கதை விவாதத்தில் தற்போது ஈடுபட்டிருக்கிறார்.
இதற்கு முன்பு, 1990ல் நாகார்ஜூனா நடிப்பில் நிர்ணயம் என்ற படத்தை இயக்கினார் பிரியதர்ஷன். அந்த படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியடைந்ததை அடுத்து தெலுங்கில் அவர் அதிக கவனம் செலுத்தவில்லை. ஆனால் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் அவர் இயக்கிய ஒப்பம் படம் தெலுங்கில் கனப்புப்பா என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. அதனால், தெலுங்கில் மீண்டும் நேரடியாக என்ட்ரி கொடுக்கிறார் பிரியதர்ஷன்.